தில்லி மத்திய வானொலியில் தமிழ்ச் செய்தி  பிரிவை தொடங்க டி.ராஜா கோரிக்கை 

தில்லியில் உள்ள அகில இந்திய வானொலியில் தமிழ்ச் செய்திப் பிரிவை மீண்டும் தொடங்க வேண்டும் என மாநிலங்களவையில்

தில்லியில் உள்ள அகில இந்திய வானொலியில் தமிழ்ச் செய்திப் பிரிவை மீண்டும் தொடங்க வேண்டும் என மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா வலியுறுத்தினார். 
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை பூஜ்ய நேரத்தில் அவர் பேசுகையில், "தமிழ் மிகவும் பழமையான, செம்மொழியாகும். இந்தியாவில் எட்டு கோடி மக்களால் தமிழ் பேசப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூரின் அலுவல் மொழியாகவும், மலேசியாவில் கல்வி மொழியாகவும், தென் ஆப்பிரிக்கா, மோரீசியஸில் சிறுபான்மையினர் மொழியாகவும் உள்ளது. மத்திய அரசு தமிழை சிறுமைப்படுத்தி வருகிறது. 
இவற்றில் ஒன்றாக, தில்லியில் உள்ள அகில இந்திய வானொலியின் மத்திய தமிழ்ச் செய்திப் பிரிவு மூடப்பட்டு, தமிழின் அந்தஸ்து குறைக்கப்பட்டு வருகிறது. தில்லியில் உள்ள தேசிய செய்தி வழங்கும் பிரிவு சென்னையில் உள்ள பிராந்திய செய்தி புல்லட்டின் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதன் பிறகு, அகில இந்திய வானொலியில் உள்ள தமிழ்ச் செய்திப் பிரிவுகளின் எண்ணிக்கை நான்கில் இருந்து மூன்றாகக் குறைந்துள்ளது. எனவே, தில்லியின் மத்திய தமிழ்ச் செய்திப் பிரிவை மீண்டும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com