அபிநந்தனைப் பாராட்டி ஆம் ஆத்மி பேரணி

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானி அபிநந்தனைப்

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானி அபிநந்தனைப் பாராட்டி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஆம் ஆத்மி சார்பில் மோட்டார்சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. 
பீதம்புராவில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சுமார் 1,000 மோட்டார்சைக்கிள்கள், கார்கள் ஆகியவற்றில் ஆம் ஆத்மி தொண்டர்கள் பங்கேற்றனர்.
 ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பொறுப்பாளர் கோபால் ராய், சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் பங்கஜ் குப்தா உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கோபால் ராய் பேசுகையில், "வரும் மக்களவைத் தேர்தலில் தில்லியில் அனைத்துத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும். கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ், பாஜக செய்யாத மக்கள் நலப் பணிகளை கடந்த 4 ஆண்டுகளில் தில்லியில் நாங்கள் செய்துள்ளோம்' என்றார். 
பங்கஜ் குப்தா பேசுகையில், "சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்து எனக்கு மிகப் பெரிய பொறுப்பை கேஜரிவால் என்னிடம் தந்துள்ளார். அதை நிறைவேற்றுவேன்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com