தேர்தல் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி நிறைவேற்றவில்லை: ஹாரூண் யூசுஃப் குற்றச்சாட்டு

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி நிறைவேற்றவில்லை என தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஹாரூண் யூசுஃப் தெரிவித்தார். 

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி நிறைவேற்றவில்லை என தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஹாரூண் யூசுஃப் தெரிவித்தார். 
மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் பல்வேறு பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது. தலைநகர் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அண்மையில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தற்போது, பாஜக வசம் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்ற காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. இதுபோன்ற சூழலில், தலைநகரில் வசிக்கும் அனைத்து சமூகத்தினரின் வாக்குகளைப் பெறும் நோக்கில் காங்கிரஸும் களத்தில் இறங்கியுள்ளது.
 குறிப்பாக தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த வால்மீகி சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காக தில்லியில் வால்மீகி சமூக மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. தில்லி மாநகராட்சி கூட்டுக் குழு, அகில இந்திய இளைஞர் முன்னணி, ஜனம் உத்ஸவ் குழு ஆகிவற்றின் சார்பில் இம்மாநாடு தில்லியில் உள்ள மெளலாங்கர் அரங்கில் நடைபெற்றது.
இதில் தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஹாரூண் யூசுஃப் பங்கேற்றுப் பேசுகையில், "தில்லி மாநகராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்பரவுப் பணியாளர்கள் நிரந்தரமாக்கப்படுவர் என 2013 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. 
அந்த வாக்குறுதியை ஆட்சியில் இருந்தும் இதுவரை அக்கட்சி நிறைவேற்றவில்லை. துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களை பிரதமர் அண்மையில் சுத்தம் செய்தார். 
மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளர்களின் நிலையை எண்ணியும், துப்புரவுப் பணியின்போது இறக்கும் தொழிலாளர்களின் நிலையை எண்ணியும் அவர் தலைகுனிய வேண்டும். 
பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டில் அச்சமான சூழலை உருவாக்க பாஜக முயற்சித்து வருகிறது என்றார்.
இந்த மாநாட்டில் பேசிய தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித், "மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, வால்மீகி சமூகத்தினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என்றார்.
இந்த மாநாட்டில், தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜே.பி. அகர்வால், கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஜெய் கிஷன், வால்மீகி சமாஜத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com