பயங்கரவாதத்தை ஒடுக்க பிரிக்ஸ் நாடுகள் முன்னுரிமை

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பிரிக்ஸ் என்பது பிரேசில்,


பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பிரிக்ஸ் என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அடங்கிய கூட்டமைப்பாகும். இந்த ஆண்டு இறுதியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு பிரேசிலில் நடைபெற உள்ளது. அதையொட்டி, பிரிக்ஸ் நாடுகளின் உயர்நிலை பிரதிநிதிகள் கூட்டம், பிரேசிலில் உள்ள குரிடிபா நகரில் கடந்த 14,15-ஆம் தேதிகளில் நடைபெற்றது. 
இந்த மாநாட்டில், இந்தியா சார்பாக, பொருளாதார உறவுகளுக்கான வெளியுறவுத் துறை செயலர் டி.எஸ். திருமூர்த்தி கலந்து கொண்டார். 
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், இந்த ஆண்டு இறுதியில் பிரேசிலில் நடக்கவிருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும், பிரிக்ஸ் நாடுகளில் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் பிரேசில் தெரிவித்தது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.  அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம், டிஜிட்டல் பொருளாதாரம், பிரிக்ஸ் தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரேசில் தெரிவித்துள்ளது. 
பிரேசில் கூறிய அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு நல்க இந்தியா தயாராக உள்ளது. அதிலும் குறிப்பாக, பயங்கரவாதத்துக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் இணைந்து தக்க நடவடிக்கை எடுப்பதற்கு, இந்தியா உறுதியான ஆதரவை தரும். அதுமட்டுமன்றி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம், சுகாதாரம் மற்றும் பாரம்பரிய மருத்துவம் ஆகிய துறைகளிலும், பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது என்று தெரிவித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com