மேற்கு தில்லி தொகுதி வேட்பாளரை அறிவித்தது ஆம் ஆத்மி

மேற்கு தில்லி மக்களவைத் தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளராக வழக்குரைஞர் பல்வீர் சிங் ஜாக்கரை ஆம் ஆத்மி தலைமை அறிவித்துள்ளது.

மேற்கு தில்லி மக்களவைத் தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளராக வழக்குரைஞர் பல்வீர் சிங் ஜாக்கரை ஆம் ஆத்மி தலைமை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அக்கட்சியின் தில்லிப் பொறுப்பாளர் கோபால் ராய் அறிவித்தார்.
 வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தில்லியில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என்று அண்மையில் ராகுல் காந்தி அறிவித்தார்.
இந்நிலையில், தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தில்லியின் 6 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்களை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது.
அதன்படி, கிழக்கு தில்லி தொகுதியில் அதிஷி, தெற்கு தில்லியில் ராகவ் சத்தா, சாந்தினி சௌக்கில் பங்கஜ் குப்தா, வடகிழக்கு தில்லியில் திலீப் பாண்டே, வடமேற்கு தில்லியில் குஹன் சிங், புது தில்லி தொகுதியில் பிரிஜேஷ் கோயல் ஆகியோர் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இவர்களை, அந்தந்தத் தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக ஆம் ஆத்மி கட்சித் தலைமை சில மாதங்களுக்கு முன்பு நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களே வேட்பாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால், மேற்கு தில்லி தொகுதிக்கான ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை  மட்டும் அறிவிக்காமல் இருந்தது.
இந்நிலையில், அந்தத் தொகுதிக்கான ஆம் ஆத்மி வேட்பாளராக பல்பீர் சிங் ஜாக்கரை ஞாயிற்றுக்கிழமை அறிவித்து செய்தியாளர்களுக்கு கோபால் ராய் அளித்த பேட்டி: வழக்குரைஞராக மக்கள் பணியாற்றி வரும் பல்பீர் சிங் ஜாக்கரை மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி வேட்பாளராக நிறுத்த கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது. ஜன லோக்பால் இயக்கம் முதல் அவர் இருந்து வருகிறார். தில்லி மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகவும் இருந்து வருகிறார். தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடவுள்ளது. 
காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க இனியும் காத்திருக்க முடியாது. மேலும், அல்கா லம்பா காங்கிரஸ் கட்சியில் இணைவதாக இருந்தால், தாராளமாக இணைந்து கொள்ளலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com