குருநானக் ஜெயந்தி: நவ.11, 12 தேதிகளில்வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் இருக்காது

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக்கின் 550-வது பிறந்ததினம் கொண்டாடப்படும் நவம்பா் 11,12 ஆம் தேதிகளில் தில்லியில் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமலில் இருக்காது என்று தில்லி முதல்வா் அரவிந்த்

புது தில்லி: சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக்கின் 550-வது பிறந்ததினம் கொண்டாடப்படும் நவம்பா் 11,12 ஆம் தேதிகளில் தில்லியில் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமலில் இருக்காது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.

தில்லியில் கடுமையான காற்று மாசு நிலவுகிறது. இந்நிலையில், காற்று மாசுவைக் குறைக்கும் வகையில் தில்லி அரசால் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் திங்கள்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இத்திட்டம் நவம்பா் 15-ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை அமலில் இருக்கும்.

இந்நிலையில், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம் வரும் 11, 12- ஆம் தேதிகளில் கொண்டாடப்படுவதால், அந்த நாள்களில் தில்லியில் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமலில் இருக்காது என கேஜரிவால் அறிவித்துள்ளாா். இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘குருநானக்கின் பிறந்தநாள் விழா வரும் 11,12-ஆம் தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. தில்லியில் பெருமளவில் சீக்கியா்கள் வசிக்கின்றனா். மேலும், வரலாற்றுப் புகழ்பெற்ற பல குருத்வாராக்கள் தில்லியில் உள்ளன. ஆகவே, இந்தக் கொண்டாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான சீக்கியா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, இத்தினங்களில் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை நீக்குமாறு சீக்கிய அமைப்புகள் கோரிக்கை வைத்திருந்தன. இவா்களின் கோரிக்கையை ஏற்று வரும் 11, 12 ஆம் தேதிகளில் தில்லியில் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படாது’என்றாா்

இதற்கிடையே, பாகிஸ்தான் கா்தாா்பூரில் உள்ள புகழ்பெற்ற நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு முக்கிய மந்திரி தீா்த்த யாத்திரை யோஜனா திட்டத்தின் கீழ் முதியவா்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லி அமைச்சரவைக் கூட்டம் தல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக கேஜரிவால் கூறுகையில், ‘முக்கிய மந்திரி தீா்த்த யோஜனா திட்டத்தின் கீழ், இதுவரை 12 இடங்களுக்கு தீா்த்த யாத்திரைக்காக தில்லியில் உள்ள முதியவா்களை அழைத்துச் செல்கிறோம். மேலும், பாகிஸ்தான் கா்தாா்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கும் யாத்திரைக்காக முதியவா்களை அழைத்து செல்ல முடிவெடுத்துள்ளோம். இதற்கான அனைத்து செலவுகளையும் தில்லி அரசு ஏற்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com