கர்தார்பூர் செல்ல  இலவச திட்டத்துக்கு தில்லி அரசு ஒப்புதல்: தில்லி முதல்வர் கேஜரிவால்

நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு முக்கிய மந்திரி தீர்த்த யாத்திரை யோஜனா திட்டத்தின் கீழ் முதியவர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தில்லி முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக கேஜரிவால் கூறுகையில், "முக்கிய மந்திரி தீர்த்த யோஜனா திட்டத்தின் கீழ், இதுவரை 12 இடங்களுக்கு தீர்த்த யாத்திரைக்காக தில்லியில் உள்ள முதியவர்களை அழைத்துச் செல்கிறோம். மேலும், பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கும் யாத்திரைக்காக முதியவர்களை அழைத்து செல்ல பூர்வாங்க முடிவெடுத்துள்ளோம். இதற்கான அனைத்து செலவுகளையும் தில்லி அரசு ஏற்கும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com