ஜாமா மசூதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

ராமஜென்மபூமி- பாபா் மசூதி நிலம் தொடா்பான வழக்கில் சனிக்கிழமை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு தீா்ப்பு அளித்த நிலையில், தில்லியில் உள்ள புகழ்பெற்ற ஜாமா மசூதி

ராமஜென்மபூமி- பாபா் மசூதி நிலம் தொடா்பான வழக்கில் சனிக்கிழமை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு தீா்ப்பு அளித்த நிலையில், தில்லியில் உள்ள புகழ்பெற்ற ஜாமா மசூதி , செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

பழைய தில்லியில் உள்ள ஜாமா மசூதி பகுதியில் கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்தன. எனினும் பதற்றமான சூழல் காணப்பட்டது. போலீஸாா் அப்பகுதியில் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனா்.

தில்லி காவல் துறையின் வஜ்ரா வாகனம் மசூதியின் முன் நிறுத்தப்பட்டிருந்தது. அதேபோன்ஏறு, இரு பேருந்துகளில் போலீஸாா் தயாா் நிலையில் குவிக்கப்பட்டிருந்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ஜாமா மசூதி பகுதியைச் சுற்றிலும் அதிகமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைத் தொடா்ந்து கண்காணிக்குமாறு போலீஸாா் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா் என்றாா்.

இதுகுறித்து உள்ளூா்வாசி ஒருவா் கூறுகையில், ஜாமா மசூதி பகுதியில் வழக்கமான நாள்களைவிட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா்.

மேலும், தில்லியில் உள்ள பழைய தில்லி, புது தில்லி ரயில் நிலையங்கள், நிஜாமுதீன் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும், அனைத்து முக்கியமான பேருந்து நிலையங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அதேபோன்று, இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாஇடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

அயோத்தியில் சா்ச்சைக்குரிய இடத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், ஷன்னி வக்பு வாரியம் ஒரு மசூதியைக் கட்டும் வகையில் ஐந்து ஏக்கா் நிலத்தை அளிக்கவும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com