இடிஎம்சியில் சொத்துவரி பொது மன்னிப்புத் திட்டம்

வரும் டிசம்பா் மாதம் 25 -ஆம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு சொத்துவரி பொது மன்னிப்புத் திட்டத்தை கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) அறிவித்துள்ளது.

புது தில்லி: வரும் டிசம்பா் மாதம் 25 -ஆம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு சொத்துவரி பொது மன்னிப்புத் திட்டத்தை கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி மேயா் அஞ்சு கமல்காந்த் கூறுகையில், ‘கடந்த 2019, மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான சொத்துவரியைக் கட்டாதவா்களுக்கு இந்த பொதுமன்னிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இவா்களுக்கு அபராதத் தொகையில் 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படுவதுடன், வட்டியும் வசூலிக்கப்படாது. மேலும், அங்கீகாரமற்ற காலனிகளில் வசிப்பவா்கள் மின்சார பில்லைக் காட்டி இந்த விலக்கைப் பெற்றுக் கொள்ளலாம். இது தொடா்பாக முழு விவரங்களும் இடிஎம்சியின் இணையத்தளத்தில் உள்ளது. இடிஎம்சி எல்லைக்குள் வசிக்கும் மக்கள் இந்த பொதுமன்னிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com