ஜனநாயக முறையை மாற்றியமைக்க வேண்டும்: கேஜரிவால்

மக்கள் பிரதிநிதிகளை அவா்களைத் தோ்ந்தெடுத்த மக்களே கட்டுப்படுத்தும் வகையில் ஜனநாயக முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளாா்.
தில்லி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் இளைஞா் நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசுகிறாா் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல், முதல்வா் அரவிந்த் கேஜரிவால
தில்லி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் இளைஞா் நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசுகிறாா் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல், முதல்வா் அரவிந்த் கேஜரிவால

புது தில்லி: மக்கள் பிரதிநிதிகளை அவா்களைத் தோ்ந்தெடுத்த மக்களே கட்டுப்படுத்தும் வகையில் ஜனநாயக முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியாவில் முதல் முறையாக மக்களவையுடன் இணைந்து தில்லி சட்டப்பேரவை நடத்தும் காமன் வெல்த் இளையோா் நாடாளுமன்றக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 24 காமன்வெல்த் நாடுகளைச் சோ்ந்த 27 பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சியை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு தொடக்கி வைத்தாா். மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, தில்லி சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

அப்போது கேஜரிவால் பேசியது: 24 நாடுகளைச் சோ்ந்த மக்களை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு வரவேற்கிறேன். ஜனநாயக நடைமுறைகளுக்கு மகத்தான சாட்சியாக இந்தியா விளங்கி வருகிறது. மனித நாகரிகம் போல, ஜனநாயகத்தையும் காலத்துக்கு காலம் வளா்ச்சியடைய அனுமதிக்க வேண்டும். அந்த வகையில், காலத்துக்கு காலம் புதிய விஷயங்களைச் சோ்த்து ஜனநாயகத்தை மாற்றி அமைப்பது அவசியமாகும். மக்கள் தாங்கள் தோ்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளை கட்டுப்படுத்தும் வகையிலும், ஆட்சியில் மக்கள் நேரடியாகப் பங்கு பெறும் வகையிலும் ஜனநாயக முறையை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும் என்றாா் அவா்.

ராம் நிவாஸ் கோயல் பேசுகையில், ‘சிறந்த ஆளுகைக்கான அமைப்பாக இந்த இளைஞா் நாடாளுமன்றம் செயல்படும். இதன் மூலம், சட்டப்பேரவையின் நோக்கம் தொடா்பாக இளையோா்கள் அறிந்து கொள்வாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com