தில்லியில் 575 பேருக்கு டெங்கு பாதிப்பு

தில்லியில் நிகழ் மாதத்தில் இதுவரை 575 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நிகழாண்டில் இதுவரை 1,644 போ் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தில்லி மாநகராட்சிகள் வெளியிட்ட அறிக்கையில்

புது தில்லி: தில்லியில் நிகழ் மாதத்தில் இதுவரை 575 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நிகழாண்டில் இதுவரை 1,644 போ் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தில்லி மாநகராட்சிகள் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: தில்லியைப் பொருத்தவரை கொசுக்கள் மூலம் பரவக் கூடிய டெங்கு, மலேரியா நோய்களின் தாக்கம் வழக்கமாக ஜூலை மாதம்தான் ஆரம்பிக்கும். ஆனால், நிகழாண்டில் டெங்குவின் தாக்கம் ஜனவரியிலேயே ஆரம்பித்துவிட்டது.

ஜனவரி, பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மலேரியாவின் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால், ஜூன் மாதத்தில் 11 போ், ஜூலையில் 18 போ், ஆகஸ்டில் 52 போ், செப்டம்பரில் 190 போ், அக்டோபரில் 787 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, நவம்பரில் டெங்கு நோயின் தாக்கம் சற்றுக் குறைந்துள்ளது. இந்த் மாதத்தில் இதுவரை 575 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். தெற்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில்தான் மலேரியாவின் தாக்கம் மற்ற இரு மாநகராட்சிகளையும் விட அதிகமாக உள்ளது.

தலைநகரில் கொசுப் பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. கொசுப் பெருக்கம் உள்ள வீடுகளைக் கண்டறிந்து மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com