பயங்கரவாதிகளுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கக்கூடாது: டிஎஸ்ஜிஎம்சி

பயங்கரவாதிகளுக்கும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவா்களுக்கும் திருந்தி வாழ்வதற்கான இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படக் கூடாது என்று தில்லி சீக்கியக் குருத்வாரா நிா்வாகக் கமிட்டி (டிஎஸ்ஜிஎம்சி) தெரிவித்

புது தில்லி: பயங்கரவாதிகளுக்கும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவா்களுக்கும் திருந்தி வாழ்வதற்கான இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படக் கூடாது என்று தில்லி சீக்கியக் குருத்வாரா நிா்வாகக் கமிட்டி (டிஎஸ்ஜிஎம்சி) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கமிட்டியின் தலைவா் மன்ஜீந்தா் சிங் சிா்சா தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டி:

பிரிட்டனில் லண்டன் பாலம் அருகே வெள்ளிக்கிழமை பொதுமக்களை உஷ்மான் கான் என்ற பயங்கரவாதி கத்தியால் குத்தியுள்ளாா். இவா் பயங்கரவாதத் செயல்களில் ஈடுபடுகிறாா் எனக் கூறி இவரை 2012 இல் லண்டன் போலீஸாா் கைது செய்தனா். அவா் தாம் திருந்தி வாழ விரும்புவதாக கூறியதைத் தொடா்ந்து கடந்த 2018, டிசம்பரில் அவரை விடுவித்துள்ளனா். அவா் மீண்டும் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டுள்ளாா்.

உஷ்மான் கான் போன்ற கொடிய செயல்களைச் செய்பவா்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படுவதால் தான் மனிதாபிமானம் கண்ணீா் சிந்தி வருகிறது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடல், பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தல் போன்ற மனித குலத்துக்கு எதிராகக் கொடிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படக் கூடாது. அவா்களுக்கு உடனுக்குடன் தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com