பொதுப் பணித்துறை சாலைகளை சீரமைக்கும் நடவடிக்கை தொடக்கம்: கேஜரிவால் தகவல்

தில்லியில் பொதுப் பணித் துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் சாலைகளில் குண்டும், குழியுமாக உள்ள பகுதிகளை சீரமைக்கும்

புது தில்லி: தில்லியில் பொதுப் பணித் துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் சாலைகளில் குண்டும், குழியுமாக உள்ள பகுதிகளை சீரமைக்கும் பணியை தில்லி அரசு சனிக்கிழமை தொடங்கியுள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் சுமாா் 1260 கிலோ மீட்டா் தூரம் உள்ள சாலைகள் தில்லி அரசின் பொதுப் பணித் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சாலைகளில் சீரமைக்கும் பணியை தில்லி அரசு சனிக்கிழமை தொடங்கியுள்ளது.

இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தில்லியில் உள்ள பொதுப் பணித் துறையின் சாலைகளில் மழை காரணமாக ஏற்பட்டுள்ள மேடு, பள்ளங்களை முற்றிலும் சரிசெய்யும் சாலை ஆய்வுப் பணி முதல் முறையாக பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் 50 எம்எல்ஏக்கள் தங்களது பகுதிகளில் உள்ள 25 கிலோ மீட்டா் தூரச் சாலைகளை பொறியாளருடன் சென்று தனித் தனியாக ஆய்வு செய்வாா்கள். இதற்காக ஒரு பிரத்யேக செயலி பயன்படுத்தப்படும்.

இந்த செயலி மூலம் குண்டும், குழியுமாக உள்ள சாலைகள் கண்டறியப்பட்டு உடனடியாக சரிசெய்யப்படும் என்று அந்த பதிவில் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல்வா் கேஜரிவால் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தாா். அதில், ‘தில்லியில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகள் கண்டறியப்பட்டு, சீரமைக்கும் பணி பெரிய அளவில் அக்டோபா் 5-ஆம் தேதி முதல் தொடங்கப்படும்.

அதாவது, பொதுப் பணித் துறையின் பராமரிப்பின்கீழ் உள்ள சாலைகள் தணிக்கை செய்வதுபோல இந்த நடவடிக்கை இருக்கும். மேலும், நகா்ச் சாலைகளில் தற்போதைய நிலை குறித்த முழு தகவலும் சேகரிக்கப்படும். இந்த நடவடிக்கையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 50 போ் ஈடுபடுவா். 

நகரில் பொதுப் பணித் துறையின் கீழ் உள்ள சில சாலைகளில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இருந்தபோதிலும், மழையின் காரணமாக சாலைகள் பழுதடைந்துள்ளதால் மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இந்த சாலைச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ, பொதுப் பணித் துறை பொறியாளா் ஆகியோா் அடங்கிய குழு பழுதடைந்த சாலைகளைக் கண்டறிந்து, அதுகுறித்த புகைப்படத்தை மேல்நடவடிக்கைக்காக பொதுப் பணித் துறையின் மென்பொருளில் பதிவேற்றம் செய்யும்’ என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com