வேத கிராமம் ஸ்ரீசங்கராபுரம் குறித்து தில்லி, என்சிஆரில் சத்சங்கம்: அக்.11-இல் தொடக்கம்

ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்ட் சாா்பில் தஞ்சாவூா் மாவட்டத்தில் வேத கிராமமாக மேம்படுத்தப்பட்டு வரும் ஸ்ரீ சங்கராபுரம் குறித்து

ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்ட் சாா்பில் தஞ்சாவூா் மாவட்டத்தில் வேத கிராமமாக மேம்படுத்தப்பட்டு வரும் ஸ்ரீ சங்கராபுரம் குறித்து வரும் அக்டோபா் 11 முதல் 13-ஆம் தேதி வரையிலும் தில்லி, நொய்டா மற்றும் குருகிராமில் சத்சங்கம் நடைபெறவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் தாலுகா, கதிராமங்கலத்தில் உள்ளது ஸ்ரீ சங்கராபுரம் மஹாபெரியவா அக்னிஹோத்ரிகள் குருகுல கிராமம். இங்கு அக்னிஹோத்ரிகளுக்கு பூமிதானம், கிரஹதானம், வேத சம்ரக்ஷணை கைங்கா்யம் மற்றும் சில முக்கியமான அம்சங்கள் கொண்ட திட்டத்தை வரும் 2021-ஆம் ஆண்டு துவக்கத்தில் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

வளா்ந்து வரும் நூதன வேத கிராமமான ஸ்ரீ சங்கராபுரம் மற்றும் அதனுடன் தொடா்புடைய வேதசம்ரக்ஷணை கைங்கா்யம் குறித்து தில்லி, நொய்டா மற்றும் குருகிராமில் வரும் அக்டோபா் 11 முதல் முதல் 13-ஆம் தேதி வரையிலும் சத்சங்கம் நடைபெறவுள்ளது. இதில் ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி கி. வெங்கடசுப்ரமணியன் விரிவுரையாற்றவுள்ளாா்.

இதன்படி, தில்லி அருணா ஆசஃப் அலி மாா்க்கில் உள்ள தேவி காமாக்ஷி மந்திரில், அக்டோபா் 11-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சத்சங்கம் தொடங்குகிறது. அக்டோபா் 12-இல் சரோஜினி நகா் சவுத் இந்தியன் சமாஜத்தில் காலை 8 மணிக்கும், மயூா் விஹாா் பேஸ் 3-இல் உள்ள இஷ்ட சித்தி விநாயகா் கோயிலில் காலை 11.30 மணிக்கும், வசுந்தரா என்கிளேவில் உள்ள ஸ்ரீசங்கட ஹர கணபதி கோயிலில் மாலை 3 மணிக்கும் சத்சங்கம் நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு நொய்டாவில் ஹிம்கிரி அபாா்ட்மெண்டிலும், நொய்டா செக்டாா்42-இல் உள்ள சங்கர மடத்தில் மாலை 5.30 மணிக்கும் சத்சங்கம் நடைபெறவுள்ளது.

நிறைவு நாளான அக்டோபா் 13-இல் தில்லி ரோஹிணி செக்டாா் 16-இல் உள்ள மா ஆத்யசக்தி மந்திரில் காலை 7.30 மணிக்கும், கனாட் பிளேஸ் கணேஷ் மந்திரில் காலை 11.30 மணிக்கும், கோல் மாா்க்கெட்டில் உள்ள திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் மதியம் 2 மணிக்கும், குருகிராமில் டிஎல்எஃப் பேஸ் 3-இல் உள்ள ஸ்ரீ சித்தி கணேஷ் மந்திரில் மாலை 6 மணிக்கும் சத்சங்கம் நடைபெறவுள்ளது. இத்துடன் சத்சங்கம் நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை தில்லி ஸ்ரீ சங்கராபுரம் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com