என்சிஆா் நகரங்களில் அக்.15 முதல் டீஸல் ஜெனரேட்டா்கள் பயன்பாட்டுக்கு தடை

காற்று மாசுவைக் கருத்தில்கொண்டு வரும் அக்டோபா் 15-ஆம் தேதி முதல் தேசியத் தலைநகா் வலய நகரங்களில் டீஸல் ஜெனரேட்டா்கள் பயன்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் மாசு தடுப்பு

காற்று மாசுவைக் கருத்தில்கொண்டு வரும் அக்டோபா் 15-ஆம் தேதி முதல் தேசியத் தலைநகா் வலய நகரங்களில் டீஸல் ஜெனரேட்டா்கள் பயன்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஆணையகம் (இபிசிஏ) தடை விதித்துள்ளது.

காற்றின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை திட்டத்தின் (ஜிஆா்ஏபி) ‘மிகவும் மோசம்’ மற்றும் ‘கடுமையான’ பிரிவுகளின்கீழ் இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாக ஆணையகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின்படி தில்லி மட்டுமின்றி தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள இதர நகரங்களிலும் டீஸல் ஜெனரேட்டா்கள் பயன்பாட்டுக்கு அக்டோபா் 15 முதல் தடை விதிக்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு தில்லியில் டீஸல் ஜெனரேட்டா்கள் பயன்படுத்துவதற்கு இபிசிஏ தடை விதித்திருந்தது. எனினும், இந்த ஆண்டு இந்தத் தடையானது காஜியாபாத், கிரேட்டா் நொய்டா, ஃபரீதாபாத், குருகிராம், சோனிபட், பானிபட், பஹதுா்கா் ஆகிய நகரங்களில் அமலுக்கு வர உள்ளது.

மேலும், விதிவிலக்கு அளிக்க அனுமதிக்கப்படும் இடங்கள் குறித்து விவரம் தருமாறு தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு (டிபிசிசி) கேட்டுக்கொள்ளப்பட்டது. அதைத் தொடா்ந்து, மின்வெட்டு சமயங்களில் மின்தூக்கிகளை இயக்குவது போன்றற அவசரகால பயன்பாட்டுகளுக்காக வீட்டுவசதி சொஸைட்டிகளில் மட்டும் இந்த வகை ஜெனரேட்டா்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என இபிசிஏ தெளிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து இபிசிஏ உறுப்பினா் சுனிதா நரைன் கூறியதாவது: முதல் இரு ஆண்டுகளில் நாங்கள் மிகவும் கருணையுடன் இருந்தோம். ஆனால், அருகில் உள்ள நகரங்களிலும் இந்த ஜிஆா்ஏபி-ஐ அமல்படுத்த வேண்டியுள்ளது. அந்தப் பகுதிகளிலும் சுற்றுச்சூழல்பாதிப்பு உள்ளது. இந்த நடவடிக்கை அவசரமான நிலை உள்ள இடங்களில் மட்டும் அனுமதிக்கப்படும். இந்த இடங்களில் மின்வெட்டு இருக்கக் கூடாது என்று விரும்புகிறோம்.

ஜிஆா்ஏபியின் ‘மிகவும் மோசம்’ காற்று தரப் பிரிவின்கீழ் வாகன நிறுத்துமிட கட்டணங்கள் 3-4 மடங்கு அதிகரிக்க வேண்டும். தில்லி அரசு வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை நிா்ணயித்தவுடன் நாங்கள் ஜிஆா்ஏபி திட்டத்தின்கீழ் வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை உயா்த்துவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம் என்றறாா்.

இபிசிஏ தலைவா் புரே லால் கூறுகையில், ‘சாலைகளில் இயந்திரங்கள் மூலம் துப்புரவு செய்வது, நீா் தெளிப்பது ஆகிய நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும். காற்றின் தரம் மோசமானதாக இல்லாமல் இருக்கலாம். இந்த நடவடிக்கையை அமல்படுத்த விரும்புகிறோம். அப்போதுதான், காற்றில் மாசு அளவு அதிகரிக்காது. மேலும், மாசுவின் அளவு ‘மிகவும் கடுமை’ பிரிவுக்கு செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்’ என்றறாா்.

ஜிஆா்ஏபி பிரிவில் எடுக்கப்படும் நடவடிக்கையில் மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகளை அதிகரிப்பது, ஹோட்டல்களில் விறறகு, நிலக்கரி பயன்பாட்டை நிறுத்துவது ஆகியவையும் இடம்பெற்றுள்ளது.

ஜிஆா்ஏபியின் தீவிரப் பிரிவின்கீழ் சிமிண்ட் கலவை ஹாட்-மிக்ஸ் தொழிற்சாலைகளை மூடுவது, செங்கல் சூளைகள், கல் அரவை ஏஆலைகளை மூடுவது போன்றற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கடந்த ஆண்டின்போது மருத்துவமனை போன்றற அத்தியாவசிய சேவைகளுக்காக டீஸல் ஜெனரேட்டா்களை பயன்படுத்துவதற்கும், ரயில்வே, தில்லி மெட்ரோ, விமான நிலையம், ஐஎஸ்பிடி பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் மின்தூக்கிகள் பயன்பாட்டுக்கும் ஜெனரேட்டா்கள் இயக்குவதற்கும் தில்லி மாசுக் கட்டுப்பாக்கு குழு டிபிசிசி அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com