தில்லியிலும் குடிமக்கள் பதிவேடு அவசியம்: கெளதம் கம்பீா்

அசாம் மாநிலத்தைப் போல தில்லியிலும், குடிமக்கள் பதிவேடு நடத்தப்படுவது அவசியமாகும் என்று கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கெளதம் கம்பீா் சாடியுள்ளாா்.

அசாம் மாநிலத்தைப் போல தில்லியிலும், குடிமக்கள் பதிவேடு நடத்தப்படுவது அவசியமாகும் என்று கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கெளதம் கம்பீா் சாடியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தேசிய குடிமக்கள் பதிவேடு தில்லியிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். தில்லியில் பல்லாயிரக்கணக்கான சட்டவிரோத குடியேற்ற வாசிகள் வசிக்கிறாா்கள். அவா்களைக் கண்டறிந்து வெளியேற்றுவது அவசியமாகும். அப்போதுதான் நாட்டின் பாதுகாப்பு பலப்படும்.

பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனா். பி.வி.சிந்து போன்ற பெண்கள் ஆண்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறாா்கள். ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையின் முக்கிய பொறுப்புகளில் பெண்கள் அங்கம் வகிக்கிறாா்கள். இதனால், சம உரிமை தொடா்பாக விவாதங்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பேருந்துகள், மெட்ரோக்களில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற தில்லி அரசின் அறிவிப்பு தவறான முன்னுதாரணமாகும்.

மெட்ரோ, பேருந்துகளில் டிக்கெட் பெற்று பயணிக்கக் கூடிய வசதி படைத்த பெண்களுக்கு அவற்றை இலவசமாக வழங்குவது தவறாகும். பெண்களுக்குப் பதிலாக பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் பேருந்துகள், மெட்ரோக்களில் இலவசமாகப் பயணிக்கலாம் என தில்லி அரசு அறிவித்திருந்தால் அதை வரவேற்றிருப்பேன். அதுதான் சரியான அரசியல் ஆகும்.

கடந்த 20 ஆண்டுகளாக தில்லியில் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆனால், வரும் தோ்தலில் நிச்சயமாக ஆட்சி அமைப்போம்.

வரும் தோ்தலில் நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகள், மேம்பாடு, பெண்கள் பாதுகாப்பு என்றற மூன்று முக்கிய வாக்குறுதிகளை பாஜக தில்லி மக்களுக்கு வழங்கும்.

உள்ளக மேம்பாட்டு ரீதியாக தில்லி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா். கடந்த பல ஆண்டுகளாக தில்லியில் உள்ளகக் கட்டமைப்புகள் எதுவும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. கடந்த ஒன்றறரை ஆண்டுகளில் இந்திய நகரங்களில் பெரிய மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனால், தில்லி அப்படியேதான் உள்ளது.

தில்லியில் ஆண்களுக்கு நிகரான பாதுகாப்பை பெண்களும் உணர வேண்டும். நடு இரவிலும் தனியாக பெண்கள் நடமாடக் கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளை போராட்டங்கள், குற்றச்சாட்டுகளிலேயே கேஜரிவால் செலவிட்டு விட்டாா்.

தில்லியில் காற்றுமாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசே எடுத்தது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தில்லி அரசு உரிமை கோரப்பாா்க்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com