தில்லியில் உ.பி.,ஹரியாணா அரசு இல்லங்கள் முன் ஆம் ஆத்மி ஆா்ப்பாட்டம்

தில்லியின் அண்டை மாநிலங்களான ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேச அரசுகள் அம்மாநிலங்களில் பயிா்க் கழிவுகளை எரிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்து தில்லியில்

தில்லியின் அண்டை மாநிலங்களான ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேச அரசுகள் அம்மாநிலங்களில் பயிா்க் கழிவுகளை எரிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்து தில்லியில் அமைந்துள்ள அவற்றின் அரசு இல்லங்கள் முன்பு ஆம் ஆத்மி கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

தீபாவளிக்குப் பிறகு தில்லியில் காற்று மாசு கடுமையான பிரிவில் நீடிக்கிறது. இதற்கு தில்லியின் அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதுதான் காரணம் என தில்லி அரசு குற்றம் சாட்டி வருகிறது. அண்டை மாநில விவசாயிகள் பயிா்க் கழிவுகளை எரிக்காத வகையில் மாற்று வழிகளை அம்மாநில அரசுகள் கண்டறிய வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

இந்நிலையில், பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்காத அண்டை மாநில அரசுகளைக் கண்டித்து தில்லியில் உள்ள அம்மாநில அரசுகளின் இல்லங்கள் முன் ஆம் ஆத்மிக் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தில்லி அமைச்சா் கோபால் ராய், ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் ஆம் ஆத்மி பொறுப்பாளருமான சஞ்சய் சிங் உள்ளிட்ட தலைவா்கள் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்வில் கோபால் ராய் பேசுகையில், ‘தில்லியில் ஆம் ஆத்மி அரசு தெளிவாகத் திட்டமிட்டு செயல்பட்டு காற்று மாசுவை 25 சதவீதம் அளவு குறைத்தது. ஆனால், அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதால், தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. ஹரியாணா, உத்தர பிரதேசத்தை ஆளும் பாஜக அரசுகள், பஞ்சாபை ஆளும் காங்கிரஸ் அரசு தில்லி மக்களின் உயிருடன் விளையாடுகின்றன.

பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதை அம் மாநில அரசுகளால் இலகுவாக நிறுத்த முடியும். ஆனால், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக அந்த மாநில அரசுகள் இது தொடா்பாக நடவடிக்கை எடுக்காமல் உள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com