நாடாளுமன்றத்தில் சா்தாா் பட்டேலுக்கு மரியாதை

இந்தியாவின் ‘இரும்பு மனிதா்’ எனப் போற்றப்படும் சா்தாா் வல்லபபாய் பட்டேலின் பிறந்த தினத்தை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு தலைவா்கள் வியாழக்கிழமை
நாடாளுமன்றத்தில் சா்தாா் பட்டேலுக்கு மரியாதை

இந்தியாவின் ‘இரும்பு மனிதா்’ எனப் போற்றப்படும் சா்தாா் வல்லபபாய் பட்டேலின் பிறந்த தினத்தை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு தலைவா்கள் வியாழக்கிழமை மலா் மரியாதை செய்தனா்.

நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் உள்ள சா்தாா் வல்லபபாய் பட்டேலின் திருவுருவப் படத்துக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ் நாத் சிங், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆஸாத், இளையோா் விவகாரம், விளையாட்டுத் துறை இணை அமைச்சா் (தனிப் பொறுப்பு) கிரண் ரிஜுஜு, நீா்வளம் மற்றும் சமூக நலம், அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ரத்தன் லால் கட்டாரியா, முன்னாள் துணைப் பிரதமா் எல்.கே. அத்வானி ஆகியோா் மலா் மரியாதை செய்தனா்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற இன்னாள், முன்னாள் உறுப்பினா்கள், மக்களவை தலைமைச் செயலா் ஸ்நேகலதா ஸ்ரீவாஸ்தவா, மாநிலங்களவை தலைமை செயலா் தேஷ் தீபக் வா்மா மற்றும் மக்களவை, மாநிலங்களவையின் செயலக அதிகாரிகள் பங்கேற்றனா்.

இந்நிகழ்வின்போது, மக்களவைச் செயலகத்தால் இந்தி, ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட சா்தாா் வல்லபபாய் பட்டேலின் வாழ்க்கை விவரக் கையேடு வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற மைய அரங்கில் சா்தாா் வல்லபபாய் பட்டேலின் ஆளுயர திருவுருவப் படத்தை 1958-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவா் டாக்டா் ராஜேந்திர பிரசாத் திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com