தில்லியில் பேட்டரி ரிக்ஷாக்களை திருடி வந்த நால்வர் கும்பல் கைது

தலைநகர் தில்லியில் பேட்டரி ரிக்ஷாக்களை (இ-ரிக்ஷா) திருடி வந்த நால்வர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தலைநகர் தில்லியில் பேட்டரி ரிக்ஷாக்களை (இ-ரிக்ஷா) திருடி வந்த நால்வர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து காவல் துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 
கடந்த புதன்கிழமை அன்று பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், தனது கணவர் பேட்டரி ரிக்ஷாவில் சென்றதாகவும், ஆனால் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும், பின்னர் தனது கணவர் ஜிடிபி மருததுவமனையில் மயக்கமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிந்ததாகவும், அடையாளம் தெரியாத சிலர் அவரது பேட்டரி ரிக்ஷா, செல்லிடப்பேசி ஆகியவற்றைத் திருடிச் சென்றதாகவும் தெரிய வந்துள்ளது என புகாரில் அப்பெண் தெரிவித்திருந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அமித் குமார்(30), ரஹிஷுதீன் (26), அடில் (26), சல்மான் (24) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டது. அவர்களிடம் இருந்து 9 பேட்டரி ரிக்ஷாக்கள், ஒரு செல்லிடப்பேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் தில்லியில் பல்வேறு இடங்களில் பேட்டரி ரிக்ஷாக்களை திருடி வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இளைஞர் கைது: தில்லியில் வாகனங்களைத் திருடி வந்ததாக சூரஜ் ( 24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அவர் மீது கொள்ளை, மோட்டார் வாகனங்கள் திருட்டு உள்பட 18 வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சம்பவத்தன்று சூரஜ், மோட்டார்சைக்கிளில் வந்த போது போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் அசோக் விஹார் பகுதியில் திருடியது என விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com