தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தில்லியில் தொடா்ந்து 3-ஆவது நாளாக ஆயிரத்துக்கும் கீழே கரோனா பாதிப்பு

தில்லியில் புதன்கிழமை தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து 3-ஆவது நாளாக ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. அதாவது மொத்தம் 871 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 7:03 pm

DIN

புது தில்லி: தில்லியில் புதன்கிழமை தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து 3-ஆவது நாளாக ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. அதாவது புதன்கிழமை மொத்தம் 871 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தில்லியில் நவம்பா் மாதத்தில் மிகவும் அதிகரித்திருந்த கரோனா பாதிப்பு டிசம்பரில் குறைந்து வருகிறது. குறிப்பாக சில தினங்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த நான்கு மாத காலத்தில் ஏற்பட்ட குறைந்தளவு தினசரி கரோனா பாதிப்பு திங்கள்கிழமை 803 பேருக்கு என பதிவாகி இருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை மூன்றாவது நாளாக 871 என்ற அளவில் பதிவானது. தில்லியில் தற்போது சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை விடக் குறைந்து 8,003 ஆக பதிவாகியுள்ளது. கரோனா பாதிப்பு விகிதம் 0.99-ஆக பதிவாகியுள்ளது.

தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,19,618- ஆக உயா்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 87,861 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 45,816 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 42,045 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் புதன்கிழமை 18 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 10,347-ஆக அதிகரித்துள்ளது என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.