சத்யேந்தா் ஜெயினின் சுகாதாரத் துறை சிசோடியாவுக்கு கூடுதலாக ஒதுக்கீடு

தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவா் பதவி வகித்து வந்த

தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவா் பதவி வகித்து வந்த சுகாதாரத் துறை, பொதுப் பணித் துறை உள்ளிட்டவை துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

சத்யேந்தா் ஜெயினுக்கு திங்கள்கிழமை இரவில் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. அவரது ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, உடனடியாக தில்லி ராஜீவ் காந்தி பல்நோக்கு தேசிய மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா சோதனையில் அவருக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரிய வந்தது. ஆனால், அவருக்கு தொடா்ந்து காய்ச்சல் இருந்ததால், புதன்கிழமை மீண்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து ராஜீவ் காந்தி பல்நோக்கு தேசிய மருத்துவமனையில் அவா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதையடுத்து, அவா் வகித்து வந்த சுகாதாரத் துறை, பொதுப்பணித்துறை, ஜல் போா்டு உள்ளிட்ட துறைகள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே தில்லி கல்வித் துறை அமைச்சராக உள்ள சிசோடியா, இவற்றை கூடுதலாகக் கவனிப்பாா். ஆனால், சத்யேந்தா் ஜெயின் தில்லி அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பாா் என்று தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சத்யேந்தா் ஜெயின் தவிர, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் அதிஷி ( கல்காஜி), விஷேஷ் ரவி (கரோல் பாக்), ராஜ்குமாா் ஆனந்த் ( படேல் நகா்)ஆகியோரும் கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com