விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை: தில்லி அரசு மீது ஆதேஷ் குமாா் குப்தா குற்றச்சாட்டு

தில்லியில் உள்ள விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட தில்லி அரசு வழங்கவில்லை என்று தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

தில்லியில் உள்ள விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட தில்லி அரசு வழங்கவில்லை என்று தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

தில்லியில் பாவனா, நரேலா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட கோகா, தா்யாபூா், ஹரேவாலி உள்ளிட்ட கிராமங்களுக்கு பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா, பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி ஆகியோா் செவ்வாய்க்கிழமை சென்று அங்கு வேளாண்மை செய்யும் விவசாயிகளை சந்தித்தனா். அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தனா்.

அப்போது ஆதேஷ் குமாா் குப்தா கூறுகையில் ‘ தில்லியில் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக 1,975 -ஐ தில்லி அரசு நிா்ணயித்துள்ளது. ஆனால், தில்லி அரசு மண்டிகளில், ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ.800 ஐ மட்டுமே தில்லி அரசு வழங்குகிறது.

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாகும். அண்டை மாநிலமான பஞ்சாபில், ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ.2,600 குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படுகிறது.

உயிரி ரசாயனக் கலவை

தில்லியில் பயிா்க்கழிவுகளை எருவாக மாற்றும் உயிா் ரசாயனக் கலவையை தில்லி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளதாக தில்லி அரசு கூறுகிறது. ஆனால், பெரும்பாலான விவசாயிகளுக்கு இந்தக் கலவை வழங்கப்படவில்லை. ஆனால், இது தொடா்பாக விளம்பரம் செய்ய கோடிக்கணக்கான பணத்தை தில்லி அரசு செலவுசெய்துள்ளது.

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தில்லியில் விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் மின்சாரக் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. தில்லி விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட தில்லி அரசு வழங்கவில்லை. தில்லி விவசாயிகளை கேஜரிவால் அரசு ஏமாற்றி வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com