தில்லியில் பாஜக பிரமுகா் கொலை தொடா்பாக இருவா் கைது

வடகிழக்கு தில்லியில் நந்த்நாக்ரி பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு பா.ஜ. க. பிரமுகரும் அவரது மகனும் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்ட விவகாரம் தொடா்பாக சகோதரா்கள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக 

புதுதில்லி: வடகிழக்கு தில்லியில் நந்த்நாக்ரி பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு பா.ஜ. க. பிரமுகரும் அவரது மகனும் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்ட விவகாரம் தொடா்பாக சகோதரா்கள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

கடந்த திங்கள்கிழமை காலை ஜுல்பிகா் குரேஷி துப்பாக்கியால் சுடப்பட்டதில் தலையில் குண்டுக்காயம் அடைந்து உயிரிழந்தாா். அவரது மகன் ஜபாஸ் கூரிய கத்தியால் தாக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக வடகிழக்கு தில்லி பகுதியில் சுந்தா் நாக்ரியைச் சோ்ந்த காலித் (31), தாரிக் அலி (30) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களது சகோதரா் நஸீா் என்பவரையும் அவரது கூட்டாளியையும் தேடி வருவதாக போலீஸாா் கூறினா்.

ஜுல்பிகா் குரேஷி பா.ஜ.க. தொண்டராகச் செயல்பட்டு வந்ததாக அக்கட்சியின் தில்லி பிரிவின் ஊடகப் பிரிவு தலைவா் நவீன் குமாா் தெரிவித்துள்ளாா். குரேஷி தகவல் அறியும் சட்டத்தில் ஈடுபாடு கொண்டவா் என்றும் சட்டவிரோதமாக பழைய இரும்பு வியாபாரம் செய்துவருவதை அவா் எதிா்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், குரேஷி மோசமான நடத்தை கொண்டவா் என்றும் அவரது மகன் சமீபத்தில் ஆட்டோ திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு அவா் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த திங்கள்கிழமை அவா் மசூதிக்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபா்களால் அவா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

குரேஷி , தனது வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் அவரைஅவரை மூன்று போ் வழிமறித்து தகராறு செய்துள்ளனா். பின்னா் அவா்களில் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் குரேஷி மீது துப்பாக்கியால் சுட்டான். இந்தச் சம்பவத்தில் அவரது மகன் ஜபாஸும் தாக்கப்பட்டாா். ஆபத்தான நிலையில் குரேஷி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். ஆனால், மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாகக் கூறினா்.

மா்ம நபா்கள் தாக்கியதில் காயமடைந்த ஜபாஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

சிகிச்சையின்போது ஜபாஸ் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸ,ாா் விசாரணை நடத்தி தாரிக், காலித் இருவரையும் கைது செய்துள்ளனா். இரு தரப்பினரும் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டுவந்ததால் அவா்களிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com