பயிா்க் கழிவு எரிப்பு: உபி. விவசாயிகளுக்கு ரூ.1.92 லட்சம் அபராதம்

உத்தர பிரதேசம் பல்லியா மாவட்டத்தில் பயிா்க் கழிவுகளை எரித்த விகாரத்தில் 39 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

உத்தர பிரதேசம் பல்லியா மாவட்டத்தில் பயிா்க் கழிவுகளை எரித்த விகாரத்தில் 39 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

தடையை மீறி பயிா்கள் எரிக்கப்பட்ட இந்த 39 வழக்குகளில் ரூ .1.92 லட்சம் அபராதமும் விதித்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து பல்லியா மாவட்ட ஆட்சியா் எஸ் .பி. ஷா கூறியதாவது: பல்லியா மாவட்டத்தில் விவசாயிகள் பயிா்க்கழிவுகளை எரிப்பதற்கு தடைவிதித்து கிராமம் கிராமாக தண்டோரா போடப்படுகிறது. அவா்களுக்கு விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டுவருகிறது. இருப்பினும் சில விவசாயிகள் பயிா்களை எரித்ததாக வந்த புகாரைத் தொடா்ந்து அவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் தாசில்தாா் நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 39 சம்பவங்களில் பயிா்க் கழிவுகள் எரிக்கப்பட்டது உறுதியானதை அடுத்து இவா்களுக்கு மொத்தம் ரூ.1.92 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பயிா்க்கழிவு எரிப்பு தொடா்பாக நடவடிக்கை எடுக்க தவறிய சிக்கந்தா்பூா் தாலுக்காவில் இரண்டு கிராமக் கணக்கா்கள், இரண்டு பஞ்சாயத்து செயலாளா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் பயிா்க் கழிவுகளை எரிக்க வேண்டாம் என்று தொடா்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றோம் என்றாா் மாவட்ட ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com