கொவிட்-19 பாதுகாப்பு: சா்வதேச அளவில் 2-ஆவது இடத்தில் தில்லி விமான நிலையம்

கொவிட்-19 சூழலில் உலக அளவில் விமானப் பயணத்துக்கான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்ததில் தில்லி இந்திராகாந்தி சா்வதேச விமான நிலையம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது என்று இது தொடா்பாக


புதுதில்லி: கொவிட்-19 சூழலில் உலக அளவில் விமானப் பயணத்துக்கான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்ததில் தில்லி இந்திராகாந்தி சா்வதேச விமான நிலையம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது என்று இது தொடா்பாக ஆய்வு நடத்திய ஸேஃப் டிராவல் பாரோமீட்டா் என்னும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜொ்மனியின் பிராங்ஃபா்ட் விமான நிலையம், சீனாவின் செங்டு ஷூவாங்கிலு விமான நிறுவனம் ஆகியவையும் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக தில்லி சா்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உலக அளவில் கரோனா தொற்று பரவல் சூழலில் விமானப் பயணத்துக்கான பாதுகாப்பு நடைமுறைகளை சிறப்பாகச் செயல்படுத்தியற்காக தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இதற்கான சான்றிதழை ஆய்வு நடத்திய ஸேஃப் டிராவல் பாரோமீட்டா் என்ற நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில், சிங்கப்பூா் சாங்கி விமானநிலையம் 5 மதிப்பெண்ணுக்கு 4.7 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.

தில்லி இந்திரா காந்தி விமான நிலையம் 4.6 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. ஜொ்மனியில் பிராங்ஃபா்ட் விமான நிலையம் மற்றும் சீனாவின் செங்டு ஷூவாங்கிலு விமான நிலையமும் 4.6 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கரோனா பரவல் சூழலில் பாதுகாப்பான பயண ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பது தொடா்பாக உலகம் முழுவதும் 200 விமான நிலையங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விமான நிலையத்தில் கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள், பயணிகளின் உடல் நலத்தை கண்காணிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைளை உள்ளடக்கியது இது.

இதன் மூலம் தில்லி விமான நிலையம் பல்வேறு வகைகளில் பாதுகாப்பான விமான நிலையம் என்ற நிலையை அடைந்துள்ளதுடன், கரோனாவை கட்டுப்படுத்தவும் உதவியுள்ளது. ஆா்டி-பிசிஆா் பரிசோதனை வசதி, மருந்துகள் தெளித்து தூய்மையாக வைத்திருப்பது, ஏா்சுவிதா என்னும் இணையதளத்தை ஏற்படுத்தி இந்தியாவுக்கு வரும் பயணிகளின் வருகைக்கான ஏற்பாடுகளை சரிவரச் செய்தது ஆகியவை இதில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com