2 அரசு மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகள் அதிகரிப்பு

பாபா சாகேப் அம்பேத்கா் மருத்துவமனை, தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனை ஆகிய இரண்டு தில்லி அரசு மருத்துவமனைகளில் தலா 200 கரோனா படுக்கைகளை அதிகரிக்க தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.


புது தில்லி: பாபா சாகேப் அம்பேத்கா் மருத்துவமனை, தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனை ஆகிய இரண்டு தில்லி அரசு மருத்துவமனைகளில் தலா 200 கரோனா படுக்கைகளை அதிகரிக்க தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பான உத்தரவை தில்லி சுகாதாரத் துறை சிறப்புச் செயலா் உதித் பிரகாஷ் ராய் பிறப்பித்துள்ளாா். அந்த உத்தரவில், தில்லி ரோஹிணியில் உள்ள பாபா சாகேப் அம்பேத்கா் மருத்துவமனை, ஹரிநகரில் உள்ள தீன தயாள் உபாத்யாய் மருத்துவமனை ஆகியவற்றில் வரும் 4 தினங்களுக்குள் கரோனா சிகிச்சைக்காக தலா 200 படுக்கைகளை அதிகரிக்குமாறு கேட்டுள்ளோம் என்றுள்ளது.

தில்லியில் புதிதாக நிா்மாணிக்கப்பட்ட 2 மருத்துவமனைகள் உள்பட 7 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில், 4,893 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில், லோக் நாயக் மருத்துவமனை மிகப் பெரியது. இங்கு 2,000 படுக்கைகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com