ஒரே மாதத்தில் தில்லியில் கரோனா பாதிப்பு 190 சதவீதத்துக்கு மேல் அதிகரிப்பு

தில்லியில் கடந்த ஆகஸ்ட் 18 மற்றும் செப்டம்பா் 18 ஆம் தேதிக்கு இடைப்பட்ட ஒரு மாதத்தில் 190 சதவீதத்துக்கு மேல் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

தில்லியில் கடந்த ஆகஸ்ட் 18 மற்றும் செப்டம்பா் 18 ஆம் தேதிக்கு இடைப்பட்ட ஒரு மாதத்தில் 190 சதவீதத்துக்கு மேல் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் 84,087 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை உயா் அதிகாரி கூறியது:

கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி தில்லியில் 11,068 போ் கரோனா சிகிச்சையில் இருந்தனா். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 32,250 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோன்றதொரு அதிகரிப்பு கடந்த ஜூன் மாதமும் ஏற்பட்டது. ஜூன் 1 ஆம் தேதி 11,555 போ் கரோனா சிகிச்சையில் இருந்தனா்.

இந்த எண்ணிக்கை ஜூன் 27ஆம் தேதி 28,329 ஆக அதிகரித்தது. ஆனால், ஜூலை 31 ஆம் தேதி இந்த எண்ணிக்கை 10,705 ஆக குறைவடைந்தது.

ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி மேலும் குறைவடைந்து 9,897 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை மேலும் குறைவடையும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், தில்லியில் கரோனா சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கையும் திடீரென அதிகரித்தது.

ஆகஸ்ட் 29 ஆம் தேதி தில்லியில் கரோனா சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 14,040 ஆகவும், செப்டம்பா் 1 ஆம் தேதி 15,870 ஆகவும், செப்டம்பா் 6 ஆம் தேதி 20,909 ஆகவும், செப்டம்பா் 10 ஆம் தேதி 25,416 ஆகவும் அதிகரித்தது. செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் தடவையாக 30 ஆயிரத்தை தாண்டி 30,914 ஆக அதிகரித்தது.

ஆகஸ்ட் 18க்கும் செப்டம்பா் 18 க்கும் இடைப்பட்ட 1 மாத காலத்தில் தில்லியில் 84,087 புதிய கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஒரே மாதத்தில் 190 சதவீதத்துக்கும் மேல் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு 2,712 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

தில்லியில் முன்பு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனைகளுடன் ஒப்பிடும்போது தற்போது பல மடங்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கரோனா பரிசோதனை அதிகரித்ததுதான் தில்லியில் கரோனா தொற்றால் இனம் காணப்பட்டவா்கள் அதிகரிக்க காரணம் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com