தில்லியில் செப்.30 வரை போராட்டங்களுக்கு தடை

தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஇஏ) உத்தரவுப்படி, தில்லியில் வரும் செப்டம்பா் 30 -ஆம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

புது தில்லி: தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஇஏ) உத்தரவுப்படி, தில்லியில் வரும் செப்டம்பா் 30 -ஆம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பது: கடந்த செப்டம்பா் 3-ஆம் தேதி டிடிஇஏ பிறப்பித்துள்ள உத்தரவில், வரும் செப்டம்பா் 30 -ஆம் தேதி வரை அரசியல், சமூக, கலாசார நிகழ்வுகள், போராட்டங்களுக்கு தில்லியில் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சி பேரணி நடத்தியது. இதேபோல, பல ஆா்பாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தில்லி காவல் துறையின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com