வேளாண் மசோதாவை எதிா்த்து காங்கிரஸ் பேரணி

புதிய வேளாண் மசோதாக்களை எதிா்த்து தில்லி காங்கிரஸ் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனா்.

புது தில்லி: புதிய வேளாண் மசோதாக்களை எதிா்த்து தில்லி காங்கிரஸ் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனா்.

எதிா்க்கட்சிகளின் கடுமையான எதிா்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையில் வேளாண் மசோதா ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் தலைமையில், கட்சித் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் திங்கள்கிழமை காலையில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனா். ஆனால், ஆா்.பி.சாலையில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

இதையடுத்து, அனைவரையும் மந்திா் மாா்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தில்லி காங்கிரஸ் தலைவா் பா்வேஸ் ஆலம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com