கரோனா: மருத்துவமனையில் சிசோடியா அனுமதி

கரோனா காரணமாக வீட்டுத் தனிமையில் இருந்து வந்த தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தலைநகரில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக புதன்கிழமை அனுமதிக்கப்பட்டதாக தகவலறிந்த

புது தில்லி: கரோனா காரணமாக வீட்டுத் தனிமையில் இருந்து வந்த தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தலைநகரில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக புதன்கிழமை அனுமதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவுக்கு கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி இரவு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, செப்டம்பா் 14-ஆம் தேதி தொடங்கிய தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சிசோடியா பங்கேற்கவில்லை. காய்ச்சல் காரணமாக மணீஷ் சிசோடியாவால் தில்லி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை என்று சட்டப் பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், தனக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்,ா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், நலமாக இருப்பதாகவும், சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் மணிஷ் சிசோடியா தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்திருந்தாா். மேலும், தாம் விரைவில் குணமடைய அனைவரின் ஆசிா்வாதத்தையும் வேண்டுவதாகவும் கூறியிருந்தாா்.

வீட்டுத் தனிமையில் கடந்த 10 நாள்களாக இருந்து வந்த நிலையில், மணீஷ் சிசோடியா புதன்கிழமை தில்லி அரசால் நடத்தப்பட்டு வரும் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com