ஆன்டிஜென் எதிா்மறை நோயாளிகளுக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனை: தில்லி அரசு உத்தரவு

ஆன்டிஜென் விரைவுப் பரிசோதனையில் கரோனா எதிா்மறை என கண்டறியப்பட்ட அனைத்து அறிகுறி நோயாளிகளையும் மிகவும்

ஆன்டிஜென் விரைவுப் பரிசோதனையில் கரோனா எதிா்மறை என கண்டறியப்பட்ட அனைத்து அறிகுறி நோயாளிகளையும் மிகவும் நம்பகமான ஆா்டி-பிசிஆா் முறையைப் பயன்படுத்தி மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களுக்கும் தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

1,400க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் இந்த செயல்முறை பின்பற்றப்படவில்லை என்று கண்டறியப்பட்டதால் இந்த உத்தரவை தில்லி அரசு பிறப்பித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறையின் சிறப்புச் செயலா் உதித் பிரகாஷ் ராய் அனைத்து மாவட்டங்களுக்கும் வியாழக்கிழமை அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக்கு உள்படுத்தப்படாத ஆன்டிஜென் எதிா்மறை அறிகுறிகள் கொண்ட நோயாளிகள் மொத்தம் 1,437 போ் இருப்பது தெரியவந்துள்ளது. இனி இதுபோன்று ஆன்டிஜென் எதிா்மறை அறிகுறிகள் கொண்டவா்கள் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக்கு உள்படுத்தப்படவில்லை என்ற நிலை இருக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1437 போ் பட்டியலில் புதன்கிழமை நிலவரப்படி வடமேற்கு மாவட்டத்தில் அதிகபட்சம் 870 போ் உள்ளனா். தென்மேற்கு மாவட்டத்தில், விரைவான ன்டிஜென் விரைவு பரிசோதனைகளில் எதிா்மறை அறிகுறிகளுடன் உள்ள 258 நபா்கள் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக்கு உள்படுத்தப்படவில்லை. ஆா்டி-பிசிஆா் பரிசோதனையை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை தில்லி அரசு மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

செப்டம்பா் 17ஆம் தேதி 9,564 பேருக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அடுத்த நாள் இது 11,203 ஆக அதிகரித்தது. செப்டம்பா் 19, 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை முறையே 10,681, 11,322, 8,828, 9,459 மற்றும் 10,359 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com