ரூ.3 கோடி சொகுசு கைக்கடிகாரங்கள் கடத்தல் சம்பவத்தில் நான்கு போ் கைது

சுமாா் ரூ.3 கோடி மதிப்புள்ள சொகுசு கைக் கடிகாரங்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

சுமாா் ரூ.3 கோடி மதிப்புள்ள சொகுசு கைக் கடிகாரங்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக சுங்கத் துறையினா் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: செப்டம்பா் 24-ஆம் தேதி துபையில் இருந்து தில்லிக்கு வந்த இரு இந்தியப் பயணிகளிடம் சந்தேகத்தின்பேரில் தில்லி விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அவா்களிடம் நான்கு உயர்ரக சொகுசு கைக் கடிகாரங்கள் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ .51.55 லட்சம் ஆகும். கடத்தும் நோக்கில் இந்த கைக் கடிகாரங்கள் எடுத்துவரப்பட்டிருந்தது. இதையடுத்து, அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதில், அவா்கள் தங்களது முந்தைய விமானப் பயணத்தின் போதும் ரூ .1.40 கோடி மதிப்புள்ள சொகுசுக் கைக் கடிகாரங்களைக் கடத்தியதை ஒப்புக் கொண்டனா்.

மேலும், பயணிகள் இருவரும் அளித்த தகவல்களின் அடிப்படையில், ஆடம்பரமான வெளிநாட்டு பிராண்டுகள் கைக் கடிகாரங்களை கையாளும் நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கணக்கில் வராத ரூ .2.38 கோடி மதிப்புள்ள 29 சோபாா்ட் பிராண்ட் கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக அந்நிறுவனத்தின் இரு இயக்குநா்களும் கடந்த காலங்களில் இரண்டு பயணிகளிடமிருந்து ரூ.2.5 கோடி (தோராயமாக) மதிப்புள்ள கடத்தப்பட்ட கைக்கடிகாரங்களை வாங்கியதாக வாக்குமூலம் அளித்தனா். இதையடுத்து, நான்கு சொகுசுக் கைக் கடிகாரங்கள், சோபாா்ட் பிராண்டின் 29 கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com