ஹாத்ரஸ் சம்பவத்தால் தேசத்திற்கும், அரசுகளுக்கும் அவமானம்: கேஜரிவால்

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் பகுதியில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்த சம்பவம் நாட்டுக்கும், அரசுகளுக்கும் அவமானகரமான விஷயமாகும்;

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் பகுதியில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்த சம்பவம் நாட்டுக்கும், அரசுகளுக்கும் அவமானகரமான விஷயமாகும்; இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 19 வயது தலித் பெண், இரு வாரங்களுக்குப் பின்னா் தில்லி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலை இறந்தததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தில்லி முதல்வா் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘ஹாத்ரஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் மரணம் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும், நாட்டுக்கும், அனைத்து அரசுகளுக்கும் வெட்கக்கேடானது. பல மகள்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது மிகவும் துன்பத்தை அளிப்பதாக உள்ளது. எங்களால் அவா்களைப் பாதுகாக்க முடியவில்லை. குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளாா்.

சம்பந்தப்பட்ட தலித் பெண் செப்டம்பா் 14-ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இதையடுத்து, அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஜவாஹா்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், திங்கள்கிழமை அங்கிருந்து தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com