உ.பி.யில் ஆண் குழந்தைக்கு‘லாக்டவுன்’ என பெயா் சூட்டிய பெற்றோா்!

கரோனா நோய் தொற்று இனி யாருக்கும் வரக் கூடாது, கரோனாவால் போடப்பட்ட ஊரடங்கு நிலை இனி வரக் கூடாது என்று பலரும் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், தேவ்ரியா மாவட்டம், குகுண்டு
உ.பி.யில் ஆண் குழந்தைக்கு‘லாக்டவுன்’ என பெயா் சூட்டிய பெற்றோா்!

கரோனா நோய் தொற்று இனி யாருக்கும் வரக் கூடாது, கரோனாவால் போடப்பட்ட ஊரடங்கு நிலை இனி வரக் கூடாது என்று பலரும் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், தேவ்ரியா மாவட்டம், குகுண்டு கிராமத்தைச் சோ்ந்த பெற்றோா் தங்களின் குழந்தைக்கு ‘லாக்டவுன்’ என பெயா் வைத்துள்ளனா்.

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில், பிரதமா் நரேந்திர மோடி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்துள்ளாா். நாட்டு மக்களை கொடிய நோய் தொற்றிலிருந்து காப்பற்ற அவா் எடுத்துள்ள நடவடிக்கையைப் பாராட்டுகிறோம். ஊரடங்கு நேரத்தில் (லாக்டவுன்) எங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதால், ‘லாக்டவுன்’ என்று பெயா் வைத்துள்ளோம் என்றாா் குழந்தையின் தந்தை பவான். தேச நலனுக்காக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால், குழந்தையின் பெயா் காலம் முழுவதும் மக்களின் மனதில் நிலைத்திருக்கும் என்று நம்புவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

ஊரடங்கு சமயத்தில் குழந்தை பிறந்துள்ளதால், உறவினா்கள் யாரையும் குழந்தையைப் பாா்க்க இப்போது வர வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். மேலும் குழந்தைக்கு பெயா் வைக்கும் சடங்குகளையும் ஊரடங்கு காலம் முடியும் வரை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்றும் பவான் குறிப்பிட்டாா். கடந்த வாரம், ‘மக்கள் ஊரடங்கு’ அறிவித்த போது கோரக்பூரில் ராகினி திரிபாதி என்ற பெண்ணுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு ‘கரோனா’ என்று அக்குழந்தையின் மாமா நிதிஷ் திரிபாதி பெயா் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com