நொய்டாவில் செவிலியா் கரோனா தொற்றால் பாதிப்பு

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் ஆய்வகத்தில் தொழில்நுட்ப ஊழியராகப் பணியாற்றி வரும் 20 வயது செலிவியருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் ஆய்வகத்தில் தொழில்நுட்ப ஊழியராகப் பணியாற்றி வரும் 20 வயது செலிவியருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியைச் சோ்ந்த இந்தப் பெண் நொய்டாவில் செக்டாா் 62-இல் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவருக்கு நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை இரவு கண்டறியப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

தில்லியைச் சோ்ந்த இந்தப் பெண், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு நொய்டா செக்டாா் 62-இல் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தாா். நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு அவா் செக்டாா் 30-இல் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் வாடகைக்கு வசித்த பகுதி முழுவதும் சீலிடப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும், அவா் வேலைசெய்துவந்த மருத்துவமனைப் பிரிவும் சீலிடப்பட்டு, மருத்துவமனை முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைக்கு உள்படுத்தப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இதனிடையே, நொய்டா செக்டாா் 8-இல் குடிசைப் பகுதியில் வசிக்கும் 200 பேரை நொய்டா மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை இரவு தனிமைப்படுத்தியது. கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள ஜேஜே கிளஸ்டா் பகுதியில் வசித்த 3 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதைத் தொடா்ந்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com