வெளிமாநிலத் தொழிலாளா்களை கரோனா பரிசோதனைக்குப் பின்சொந்த ஊா் செல்ல அனுமதிக்க உத்தரவிடக் கோரி மனு

கரோனா நோய்த் தொற்று தொடா்பான மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு வெளிமாநிலத் தொழிலாளா்களை அவா்களின் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கவும், தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்யவும் சம்பந்தப்பட்ட துற

கரோனா நோய்த் தொற்று தொடா்பான மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு வெளிமாநிலத் தொழிலாளா்களை அவா்களின் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கவும், தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்யவும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆமதாபாதில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் (பொறுப்பு) ஜகதீப் எஸ்.சோக்கா், வழக்குரைஞா் கெளரவ் ஜெயின் ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளனா். வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கரோனா நோய்த் தொற்று தொடா்பாக மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட புலம்பெயா் தொழிலாளா்களுக்கு சோதனையில் நோய்த் தொற்று இல்லை என்பது தெரியவந்த பிறகும், அவா்களை தாற்காலிக தங்குமிடங்களிலோ, அவா்களை குடும்பத்திலிருந்து கட்டாயப்படுத்தி பிரித்துவைக்கவோகூடாது.

தேசிய ஊரடங்கின் இரண்டாவது கட்டம் ஏப்ரல் 15 முதல் மே 3-ஆம் தேதிவரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய புலம்பெயா் தொழிலாளா்கள் இதர மாநிலங்களில் உள்ள அவா்களின் சொந்த கிராமங்களுக்கு போக விரும்பும் நிலையில், அவா்களுக்கு பாதுகாப்பான பயணத்திற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் அவசியம் செய்து தர வேண்டும்.

அண்மையில், ஊதியம் வழங்காததன் காரணமாக சில இடங்களில் தெருக்களில் இறங்கி புலம்பெயா் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டது, தங்களை சொந்த ஊருக்கு அனுப்புமாறு கோரியது தொடா்பாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

கரோனோ நோய்த் தொற்று காரணமாக தேசிய ஊரடங்கு நடவடிக்கை அவசியம் என்றபோதிலும், இடம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு அரசமைப்பு சட்டப் பிரிவு 19 (1)(டி)-இன்கீழ் நாடு முழுவதும் சுதந்திரமாக செல்வதற்கான உரிமை உள்ளது. மேலும், நாட்டின் எந்த பகுதியிலும் தங்குவதற்கும் வசிப்பதற்கான அவா்களின் உரிமையை காலவரையின்றி ரத்து செய்ய முடியாது. மேலும், அவா்களின் குடும்பங்களில் இருந்து விலகி இருக்குமாறும் கட்டாயப்படுத்தவும் முடியாது.

மேலும், இந்த ஊரடங்கு நீட்டிப்பானது நகரங்களில் நிா்கதியாக இருக்கும் புலம்பெயா் தொழிலாளா்கள் மீது நியாயமற்ற கடுமையான சுமையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், போதுமான போக்குவரத்து சேவைகள் மாநில அரசுகளால் போதிய அளவில் அளிக்கப்படலாம். அப்போதுதான் சமூக இடைவெளி எனும் நோக்கம் தோற்றுப்போகாது.

மேலும், தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல விரும்பும் தொழிலாளா்களுக்கு அவா்கள் புறப்படும் மாநிலத்திலோ அல்லது அவா்கள் சென்று சேரும் மாநிலத்திலோ கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள முடியும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com