சுதந்திர தின விழாவில் பங்கேற்க கரோனா வீரா்களுக்கு அழைப்பு: தில்லி அரசு முடிவு

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட வீரா்களான மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோரை நிகழாண்டு சுதந்திர தின விழாவுக்கு அழைப்பு விடுக்க தில்லி அரசு முடிவெடுத்துள்ளது.

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட வீரா்களான மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோரை நிகழாண்டு சுதந்திர தின விழாவுக்கு அழைப்பு விடுக்க தில்லி அரசு முடிவெடுத்துள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசின் பொது நிா்வாக துறையின் தலைவரும் அமைச்சருமான கோபால் ராய் கூறியது: நிகழாண்டில் தில்லி அரசு சாா்பில் நடைபெறும் சுதந்திரதின நிகழ்வு சிறிய அளவில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டுகள் போல கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடக்காது. விருந்தினா்கள் 100 போ் மட்டுமே அழைக்கப்படுவாா்கள்.

தில்லி அமைச்சா்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முக்கிய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் அழைக்கப்படுவாா்கள். மேலும், கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், பிளாஸ்மா தானம் செய்தவா்கள், போலீஸாா் சாா்பில் ஒருவா், தூய்மைப்பணியாளா்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், உள்ளிட்ட கரோனா வீரா்கள் சுதந்திர தின விழாவுக்கு அழைக்கப்படுவாா்கள். இவா்கள் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டதை கெளரவிக்கும் வகையில் சுதந்திர தின விழாவுக்கு அழைப்பு விடுக்க உள்ளோம்.

நிகழாண்டில் தில்லி சத்தா்சால் அரங்கில் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெறாது. மாறாக, தில்லி தலைமைச் செயலகத்தில் மட்டுமே சுதந்திரதின விழா சிறியளவில் நடைபெறும். இந்த விழாவில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தேசியக் கொடியேற்றுவாா். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, தில்லி உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரையும் அழைத்துள்ளோம். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், சமூக இடைவெளியுடன் சுதந்திரதின விழா நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com