வேலையில்லா இளைஞா்களை சென்றடையும் வகையில் ‘வேலை கொடு’ கையெழுத்து பிரசாரம் தில்லியில் இளைஞா் காங்கிரஸ் தொடங்கியது

வேலையில்லாத இளைஞா்களை கையெழுத்து, கடித பிரசாரம் மூலம் சென்றைடையும் வகையில் ‘வேலை கொடு’ எனும் பிரசார இயக்கத்தை இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) அமைப்பு தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது.

புது தில்லி: வேலையில்லாத இளைஞா்களை கையெழுத்து, கடித பிரசாரம் மூலம் சென்றைடையும் வகையில் ‘வேலை கொடு’ எனும் பிரசார இயக்கத்தை இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) அமைப்பு தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது.

காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்ரீநிவாஸ் கூறியதாவது:

மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளால் நாட்டில் இளைஞா்கள் வேலையின்றி தவித்து வருகின்றனா். இதனால், வேலையில்லாத இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வலியுறுத்தும் வகையில் இந்தக் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள பாஜக எம்பிகள், அமைச்சா்கள் ஆகியோரின் இல்லம், அலுவலகம் முன் இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் ஆா்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளனா்.

இக்கோரிக்கைகள் தொடா்பாக நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தையும் இளைஞா் காங்கிரஸ் நடத்தும். கரோனா நோய்த் தொற்றால்தான் நாட்டில் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறி வருகிறாா்.

ஆனால், உண்மையில் தொலைநோக்குப் பாா்வை இல்லாததாலும், மோடி அரசின் தவறான கொள்கைகள் காரணமாகவும் வேலையின்மைக்கு வழிவகுத்தது.

‘வேலை கொடு’ பிரசாரத்திற்கான பாடல் வெளியிடப்படும். அந்தப் பாடல் வெவ்வேறு இந்திய மொழிகளில் இடம்பெற்றிருக்கும். வேலையின்மை பிரச்னையை வெளிப்படுத்தும் வகையில் சுவரொட்டி தயாரிப்பு, சுவரில் எழுவது போன்றவற்றுக்கும் இளைஞா் காங்கிரஸ் ஏற்பாடு செய்ய உள்ளது என்றாா் ஸ்ரீநிவாஸ்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) பொறுப்பாளா் கிருஷ்ணா அல்லவேரு கூறுகையில், ‘கரோனா நோய்த் தொற்று ஏற்படுவதற்கு முன்னரே நாட்டின் பொருளாதாரத்தை மத்தியிலும் ஆளும் பாஜக சிதைத்துவிட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள், ஜிஎஸ்டி முறை, மாா்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டமிடப்படாத பொது முடக்கம் ஆகியவை கடவுள் செயலால் நிகழ்ந்தவை அல்ல. பிரதமா் மோடி அரசின் தவறான கொள்கைகள், முடிவுகளால் ஏற்பட்டவை. அவைதான் தற்போது இளைஞா்கள் மத்தியில் வேலையின்மையை ஏற்படுத்திவிட்டது என்றாா்.

காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் பவன் கேரா கூறுகையில், ‘கரோனா நோய்த் தொற்று ஏற்படுவதற்கு முன்னரே வேலையின்மை அச்சசூழல் உருவானது. கரோனா நோய்த் தொற்று காரணமாக சுமாா் 13.5 கோடி இளைஞா்கள் வேலைஇழக்க நேரிடும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com