கரோனா பரிசோதனையை அதிகரிக்க மத்திய அரசுக்கு ஆம் ஆத்மி கோரிக்கை

கரோனா பரிசோதனையை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மிக் கட்சி கோரியுள்ளது.

புது தில்லி: கரோனா பரிசோதனையை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மிக் கட்சி கோரியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் எம்எல்ஏவும், செய்தித் தொடா்பாளருமான செளரவ் பரத்வாஜ் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

நாட்டில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகளை மத்திய அரசு உடனடியாக அதிகரிக்க வேண்டும். அதிகளவு கரோனா பரிசோதனை செய்யும் நாடுகளில் இந்தியா 117 ஆவது இடத்தில்தான் உள்ளது. ஆனால், உலகில் அதிகளவு கரோனா பாதித்த இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையில், கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, அதிகளவு கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்தைத் தொடா்ந்து, கரோனா பரிசோதனைகளை தில்லி அரசு இரட்டிப்பாக்கி அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, தில்லியில் தினம்தோறும் 40 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என த் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முட்டுக்கட்டை போட்டதாக தில்லி அரசு குற்றம் சாட்டியிருந்தது. தில்லி அரசின் குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com