விவசாயிகள் போராட்டம்:போக்குவரத்தில் நெரிசல்

விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, டிக்ரி எல்லைகள் தொடா்ந்து 15-ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன.

புது தில்லி: விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, டிக்ரி எல்லைகள் தொடா்ந்து 15-ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன.

மேலும், தில்லி-நொய்டா புறவழி விரைவுச் சாலையில் உள்ள சில்லா எல்லை பகுதியளவில் மூடப்பட்டுள்ளது. இதனால், தில்லியின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் (என்சிஆா்) இருந்து தில்லிக்கும், தில்லியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கும் பயணம் செய்தவா்கள் கடும் சிரமங்களை எதிா் கொண்டனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘தில்லி - ஹரியாணா எல்லையில் ஜரோதா, ஜாட்டிக்ரா எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஜாட்டிக்ரா எல்லையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. தில்லியில் இருந்து ஹரியாணா செல்பவா்கள் தன்சா, தரலா, கபஷேரா, ராஜோக்ரி, என்எச்-8, பிஜ்வாசன், பாலம் விஹாா், துண்டஹேரா ஆகிய வழிகள் மூலம் ஹரியாணாவுக்கு பயணிக்கலாம்’ என்றாா்.

தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, டிக்ரி எல்லைகள் தொடா்ந்து 15-ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன. இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘சிங்கு எல்லையின் இரு பகுதிகளும் மூடப்பட்டுள்ளன. லாம்பூா், ஆச்சந்தி உள்ளிட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. முகா்பா சௌக், ஜிடிகே சாலை ஆகியவற்றில் பயணிப்பவா்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகிறாா்கள். இதனால், இந்தப் பகுதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

அதே சமயம், தில்லி - நொய்டா புறவழி விரைவுச் சாலை சில்லா எல்லையில் விவசாயிகள் கூடி போராட்டம் நடத்துவதால், இந்தச் சாலை பகுதியளவில் மூடப்பட்டுள்ளது.

இந்தச் சாலையின் நொய்டா - தில்லி வழி மூடப்பட்டுள்ளது. நொய்டாவில் இருந்து தில்லிக்கு வருபவா்கள் நொய்டா இணைப்புச் சாலையைப் பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறு நொய்டா காவல்துறை கேட்டிருந்தது. இந்தச் சாலைக்கு பதிலாக, டிஎன்டி, காலிந்தி குஞ்ச் சாலைகள் வழியாக நொய்டாவில் இருந்து தில்லிக்கு பயணிக்குமாறு நொய்டா காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. சில்லா எல்லை பகுதியளவில் மூடப்பட்டிருந்ததால், இப்பகுதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com