ஹஜ் பயணம்: விண்ணப்பங்களை சமா்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

புது தில்லி: 2021 - ஆம் ஆண்டு ஹஜ் பயணத்துக்கான விண்ணப்பப் படிவங்களை சமா்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2021, ஜனவரி 10 -ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

2021-ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்துக்கான விண்ணப்ப படிவங்களை சமா்ப்பிப்பதற்கான கடைசி தேதி வியாழக்கிழமை என (டிசம்பா் 10) இருந்தது. ஆனால், இது தற்போது 2021, ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய ஹஜ் கமிட்டி கூட்டம் அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: 2021-ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு இதுவரை 40,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், துணையில்லாமல் (மெஹ்ராம் இல்லாமல்) விண்ணப்பித்த 500-க்கும் மேற்பட்ட பெண்களும் இதில் அடங்கும். இதே பிரிவின் கீழ் கடந்த 2020-ஆம் ஆண்டு ஹஜ் பயணத்துக்கு 2100 -க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களது விண்ணப்பமும் 2021 ஹஜ் பயணத்துக்குச் செல்லுபடியாகும் என்பதால், இந்தப் பெண்கள் 2021-இல் ஹஜ் பயணம் மேற்கொள்வா் துணை இல்லாமல் செல்லும் பெண்கள் பிரிவின் கீழ் உள்ள அனைத்து பெண்களும், குலுக்கல் முறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு பயணத்திற்கு அனுமதிக்கப்படுவா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com