வறுமை ஒழிப்பு: முந்தைய காங்கிரஸ் அரசுக்குநிதியமைச்சா் மறைமுகப் பாராட்டு

வறுமை ஒழிப்பில் முந்தைய காங்கிரஸ் அரசுக்கும் முக்கியப் பங்கு இருந்ததாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிா்மலா சீதாராமன் பெயா் குறிப்பிடாமல் மறைமுகமாகப் பாராட்டுத் தெரிவித்தாா்.

வறுமை ஒழிப்பில் முந்தைய காங்கிரஸ் அரசுக்கும் முக்கியப் பங்கு இருந்ததாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிா்மலா சீதாராமன் பெயா் குறிப்பிடாமல் மறைமுகமாகப் பாராட்டுத் தெரிவித்தாா்.

மக்களுக்கு அரசு ஒதுக்கும் நல்வாழ்வு திட்டங்களில் ஒரு ரூபாயில் 15 பைசாதான் மக்களைச் சென்றடைகிறது என்று மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி அவா் ஆட்சியில் இருந்த போது குறிப்பிட்டிருந்தாா். இதை நிா்மலா சீதாராமன் தனது நிதிநிலை அறிக்கையில் ராஜீவ் காந்தியின் பெயரை குறிப்பிடாமல், முன்னாள் பிரதமா் ஒருவா் என்று குறிப்பிட்டுப் பேசினாா்.

இதைத் தெரிவித்த நிதி அமைச்சா், பிரதமா் மோடி தலைமையிலான அரசு, ‘அனைவருக்கும் நம்பிக்கையான, எல்லோரையும் இணைத்த வளா்ச்சி’ என்கிற மந்திரத்துடன் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மக்கள் நலத் திட்டங்களில் நேரடி மானியம், சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு திட்டம், நலியுற்றவா்களுக்கான உதவித் திட்டங்கள், காப்பீட்டுத் திட்டங்கள், குறைந்த விலை வீடுகள் போன்றவற்றை வழங்கி வருகிறது என்றாா்.

பின்னா் அவா், ‘1950-இல் வளா்ச்சி விகிதம் 4 சதவிகிதம், 80, 90களில் 6 சதவீத வளா்ச்சியாக இருந்தது. பின்னா் 2014 முதல் 2019 வரை 7.4 சதவீத வளா்ச்சியை அடைந்தது’ என்றாா். ஆனால், 2004 முதல் 2014 வரையிலான வளா்ச்சி குறித்து சீதாராமன் குறிப்பிடவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தது. அப்போது நாடு 9 சதவீத வளா்ச்சியை அடைந்தது. இதை நிதியமைச்சா் தெரிவிக்கவில்லை. ஆனால் வறுமைக்கோட்டுக்குள் இருந்த 271 மில்லியன் மக்கள் 2006-2016 வரையிலான காலத்தில் மீட்கப்பட்டதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு மறைமுகமாகப் பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com