தில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி!கருத்துக் கணிப்பில் தகவல்

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியா டுடே-ஆக்சஸ் கருத்துக் கணிப்பில் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 59 முதல் 68 இடங்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளது. இதில் பாஜக இரண்டாவது இடத்தை பெற்று 2 முதல் 11 சட்டப்பேரவை தொகுதிகளில் மட்டுமே அக் கட்சி தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் கூறி உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சிக்கு இதேபோன்று மற்ற கருத்துக் கணிப்புகளிலும் அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே-ஆக்சிஸ் கருத்துக் கணிப்பில் இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 56 சதவீத வாக்குகளும் பாஜக வுக்கு 35 சதவீத வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு 5 சதவீதம் மற்றும் இதர வேட்பாளா்களுக்கு 4 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டிவி, சுதா்சன் நியூஸ் ஆகிய கருத்துக் கணிப்புகளில் மட்டும் பாஜகவிற்கு 26 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பு முடிவுகள் வருமாறு:

நேத்தா நியூஸ்எக்ஸ்

ஆம் ஆத்மி: 53 - 57

பாஜக: 11 - 17

காங்கிரஸ்: 0 - 2

டைம்ஸ் நவ் - ஐபிஎஸ்ஓஎஸ்

ஆம் ஆத்மி கட்சி: 47

பாஜக: 23

காங்கிரஸ்: 0

தி ஜான்கி பாத் - ரிபப்ளிக் டிவி

ஆம் ஆத்மி கட்சி: 48 - 61

பாஜக: 9 - 21

காங்கிரஸ்: 0

சி.ஓட்டா் - ஏபிபி நியூஸ்

ஆம் ஆத்மி கட்சி: 49 - 63

பாஜக: 5 - 19

காங்கிரஸ்: 0

இந்தியா டிவி

ஆம் ஆத்மி கட்சி: 44

பாஜக: 26

காங்கிரஸ்: 0

சுதா்சன் நியூஸ்

ஆம் ஆத்மி 42

பாஜக: 26

காங்கிரஸ்: 2

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com