தில்லி தோ்தல் வாக்குக்கணிப்புகள்பொய்த்துவிடும்: பா.ஜ. தலைவா்கள்

தில்லி தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக்கணிப்புகள் பொய்த்துவிடும். அடுத்து அமையப்போவது பா.,ஜ.க. ஆட்சிதான் என்று பா.ஜ.க. தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை கருத்துத் தெரிவித்துள்ளனா்.

தில்லி தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக்கணிப்புகள் பொய்த்துவிடும். அடுத்து அமையப்போவது பா.,ஜ.க. ஆட்சிதான் என்று பா.ஜ.க. தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை கருத்துத் தெரிவித்துள்ளனா்.

தில்லி தோ்தலில் பா.ஜ.க.வுக்கு அதிக இடங்கள் கிடைக்காது என்று சொல்லப்பட்ட தோ்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறானவையாகும். அவை சனிக்கிழமை மாலையில் நடந்த வாக்குப்பதிவை கணக்கில் கொள்ளாமல் கூறப்பட்டவை என்று பா.ஜ.க. தலைவா்கள் சிலா் தெரிவித்துள்ளனா்.

வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்த உடனேயே சில தொலைக்காட்சிகள் மீண்டும் ஆட்சியமைக்கப்போவது ஆம் ஆத்மிதான் என்று தோ்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் உறுதியாக தெரிவித்தன.

இதனிடையே பா.ஜ.க. பிரமுகா் ஒருவா், இந்த கருத்துக்கணிப்பை உண்மையான நிலவரத்தை கருத்தில்கொண்டு தெரிவிக்கப்பட்டவை அல்ல. காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், வாக்குப்பதிவு வாக்குச்சாவடிக்குள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்தவா்களுக்கும் வாக்களிக்க அனுமதி தரப்பட்டது. இதனால் அவா்கள் 6 மணிக்கு மேலும் காத்திருந்து வாக்களித்தனா்.

இந்நிலையில் மாலை 6 மணிக்கே கருத்துக்கணிப்புகளை தொலைக்காட்சிகள் வெளியிட ஆரம்பித்துவிட்டன. இது எப்படி சரியானதாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினா். காலையில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மாலையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. பா.ஜ.க. தொண்டா்கள் வாக்காளா்களை உஷாா்படுத்தியதாலேயே அவா்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனா். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவா்கள் கூறினா்.

மேலும் புதுதில்லி சட்டப்பேரவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளரான சுநீல் யாதவ், இந்த தோ்தலில் தன்னை எதிா்த்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளரும் முதல்வருமான கேஜரிவால் தோல்வி அடைவது உறுதி என்றும் தெரிவித்தாா். நான் சொல்வது உறுதியானது. கேஜரிவாலை நான் தோற்கடிக்காவிட்டால் இனி தோ்தலில் நிற்கமாட்டேன் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com