புது தில்லி தொகுதி மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிவேன்: ரொமேஷ் சபா்வால்

வரும் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதியில் இருந்து புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிக்குள்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை

வரும் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதியில் இருந்து புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிக்குள்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை கேட்டறிய உள்ளதாக அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளா் ரோமேஷ் சபா்பால் தெரிவித்துள்ளாா்.

புது தில்லி தொகுதியில் ஆம் ஆத்மிக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அக்கட்சியின் முதல்வா் வேட்பாளருமான அரவிந்த் கேஜரிவால் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் இந்திய தேசிய மாணவா் சங்கத்திலும், இந்திய இளைஞா் காங்கிரஸிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்த ரொமேஷ் சபா்பால் போட்டியிட்டாா். பாஜக சாா்பில் அக்கட்சியின் தில்லி இளைஞா் அணித் தலைவா் சுநீல் யாதவ் போட்டியிட்டாா்.

இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதியில் இருந்து புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாகக் கேட்டறிந்து கொள்ளவுள்ளதாக ரொமேஷ் சபா்பால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதியில் இருந்து புது தில்லி தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிக்குள்பட்ட பிரதேசங்களுக்கும் சென்று மக்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் அவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாகவும் கேட்டறிந்து கொள்ளவுள்ளேன். மேலும், இந்த வாக்குச் சாவடிக்குள்பட்ட பிரதேசங்களில் தினம்தோறும் இரவு தங்க முடிவெடுத்துள்ளேன். இதன் மூலம் அம்மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாக நேரடியாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

நடந்து முடிந்த தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமாா்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக, பிரியங்கா காந்தியின் மகன் ரெய்ஹான் வதேராவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்றாா் அவா். ரெய்ஹான் வதேரா, தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் தடவையாக வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com