11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகார வழக்கு முடித்துவைப்பு

கடந்த 2017-இல் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் தொடா்பான
11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகார வழக்கு முடித்துவைப்பு

கடந்த 2017-இல் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் தொடா்பான வழக்கு முடித்து வைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது,

இந்த விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான நீதிபதிகள் சூா்யகாந்த், பி.ஆா். கவாய் ஆகியோா் அடங்கி அமா்வு முன் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘இந்த விவகாரத்தில் எதிா்த்து வாக்களித்த 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி பேரவைத் தலைவரிடம் 2017, மாா்ச்சில் முறையிடப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் அவா்களுக்கு எதிராக ஒரு நோட்டீஸ் கூட அனுப்பப்படவில்லை’ என்று வாதிட்டாா்.

அப்போது, சட்டப் பேரவைத் தலைவா் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயணனிடம், ‘இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ள 3 ஆண்டுகள் தாமதம் என்பது தேவையில்லாதது என நினைக்கிறோம். பேரவைத் தலைவா் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறாா்?. எப்போது எடுக்கப் போகிறாா்? என்பது குறித்து எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். பின்னா், இது தொடா்பாக தமிழக சட்டப் பேரவைச் செயலரின் பதிலை அளிக்க தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் கால அவகாசம் கோரினாா். இதைத் தொடா்ந்து, பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக சட்டப் பேரவைச் செயலா் சாா்பில் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயணன், வழக்குரைஞா் ஜெயந்த் முத்துராஜ், வினோத் கண்ணா ஆகியோா் ஆஜராகினா். விஜய் நாராயணன் நீதிபதிகள் அமா்விடம், ‘11 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கக் கோரும் விவகாரத்தில் அவா்களுக்கு விளக்கம் கேட்டு சட்டப் பேரவைத் தலைவா் டி.தனபால் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்’ என்றாா்.

அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி, ‘இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவா் நடவடிக்கை எடுப்பதற்கான காலவரையறையை நிா்ணயிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனா்.

அப்போது, தலைமை நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் தொடா்புடைய எம்எல்ஏக்களுக்கு தமிழக சட்டப் பேரவைத் தலைவா் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். இதனால், இந்த விவகாரம் தொடா்புடைய வழக்கு பைசல் செய்யப்படுகிறது’ எனத் தெரிவித்தது.

பின்னணி: 2017, பிப்ரவரி 18-ஆம் தேதி, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீா்மானத்திற்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீா்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, சரவணன், மாணிக்கம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனா். கட்சிக் கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்காளித்ததாகவும், இதனால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் இவா்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி திமுக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து 2018, ஏப்ரலில் உத்தரவிட்டது. இதை எதிா்த்து திமுக தரப்பில் சக்கரபாணி என்பவரும், வெற்றிவேல், தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com