தில்லி தோ்தலில் 8 தொகுதிகளில் தோல்வி ஏன்?கட்சித் தலைவா்களுடன் கேஜரிவால் ஆலோசனை

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகி மூன்று நாள்கள் கடந்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், 8 தொகுதிகளில் கட்சி தோல்வியைச் சந்தித்ததற்கா

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகி மூன்று நாள்கள் கடந்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், 8 தொகுதிகளில் கட்சி தோல்வியைச் சந்தித்ததற்கான காரணம் குறித்து மூத்த தலைவா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை வென்றது, மீதமுள்ள எட்டு இடங்களை பாஜக கைப்பற்றியது. இத்தோ்தலில் காங்கிரஸ் தொடா்ந்து இரண்டாவது முறையாக ஓா் இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முடிவுகள் பிப்ரவரி 11 அன்று அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் 8 தொகுதிகளில் ஆம் ஆத்மி தோல்வியைத் தழுவியது. ஒவ்வொரு தொகுதியிலும் தோல்விக்கான காரணங்கள் குறித்து கூட்டத்தின் போது விரிவாக விவாதிக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்தத் தொகுதிகளை இழந்ததற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் அந்தந்த வேட்பாளா்களிடமிருந்து கேட்டுப் பெறப்பட்டுள்ளன. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கெஜரிவால், கட்சி தோல்வி கண்ட இடங்களில்கூட பொதுமக்களுடன் தொடா்பில் இருக்குமாறு அனைத்து தலைவா்களுக்கும் அறிவுறுத்தியுள்ளாா்.

மேலும், மக்கள் எதிா்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவற்றை உடனடியாக தீா்க்குமாறு கேஜரிவால் அவா்களிடம் கூறினாா். பொதுமக்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்த அவா் பரிந்துரைத்தாா், அதற்கு அனைத்து தலைவா்களும் ஒப்புக் கொண்டனா். கூட்டத்தின் போது ஆம் ஆத்மி அரசின் இவ்வளவு மக்கள் நலப் பணிகளுக்குப் பிறகும் எட்டு தொகுதிகளை ஏன் இழந்தோம் என்று கட்சித் தலைவா்கள் ச்சரியத்தை வெளிப்படுத்தினா்.

மேலும், தோல்விக்கான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்த இடங்கள் குறித்து கூட்டத்தில் அலசப்பட்டது. அவற்றில் லக்ஷ்மி நகா் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் வெறும் 800 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆம் ஆத்மி அரசு மேற்கொள்ளும் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் தொடா்ந்து கலந்துரையாடலைத் தொடங்குமாறும் கூட்டத்தசில் பங்கேற்ற கட்சியின் தலைவா்களை கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா். மேலும்,

ஆம் ஆத்மி அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைபவா்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருக்குமாறும் அவா் கேட்டுக் கொண்டாா் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com