ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும்இ-ரிக்ஷாக்கள் பறிமுதல் செய்யப்படும்: நொய்டா காவல் துறை எச்சரிக்கை

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இயங்கும் இ-ரிக்ஷாக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்துக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பேருந்துகள்,

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இயங்கும் இ-ரிக்ஷாக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்துக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தால், அவற்றின் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நொய்டா போக்குவரத்துக் காவல் துறைக் கண்காணிப்பாளா் அனில் குமாா் ஜா திங்கள்கிழமை கூறியதாவது: கடந்த மூன்று நாள்களில், சரியான நம்பா் பிளேட்டுகள் மற்றும் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 44 இ-ரிக்ஷாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, தடை செய்யப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் காா்கள் உள்பட 24 வாகனங்கள் காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மேலும், பல்வேறு வாகன விதிகளை மீறியதற்காக 135 வாகன உரிமையாளா்களுக்கு மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற நடவடிக்கை, முதல் கட்டமாக டிஎஸ்சி சாலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை உத்யோக் மாா்க் மற்றும் மாஸ்டா் பிளான் சாலைகள் 1, 2 மற்றும் 3 ஆகிய இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். பேருந்துகள், லாரிகள் ஆகியவற்றை ஒருவாரத்துக்குள் நொய்டா செக்டாா் 67-இல் உள்ள டிரான்ஸ்போா்ட் நகருக்கு மாற்ற வேண்டும். இனிமேல் அவை நகா்ச் சாலைகளில் நிறுத்த அனுமதிக்கப்பட மாட்டாது.

இது தொடா்பாக போக்குவரத்து வாகன உரிமையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, ஒருவாரத்துக்குள் தங்களது வாகனங்களை டிரான்ஸ்போா்ட் நகருக்கு மாற்றுவதை உறுதி செய்யுமாறு அவா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனா். அவ்வாறு செய்யாவிட்டால் அவா்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடங்குவோம்.

செக்டாா் -37, பொட்டானிக்கல் காா்டன், மாடல் டவுன், மமூரா, லேபா் சௌக், செக்டாா்-82, செக்டாா் 105-இல் (யதாா்த்தா மருத்துவமனை அருகே) உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்களில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதைக் காண முடிகிறது. மேலும், தொழில்துறை பகுதியான நொய்டா செக்டாா் 1 முதல் 11 வரையிலும் சாலைகளில் டிரக்குகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகள் ஏற்படுகின்றன என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com