ஜேஎன்யு தாக்குதல் சம்பவம்: இடதுசாரி மாணவா்கள் மீது ஏபிவிபி குற்றச்சாட்டு

ஜவாஹா்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜேஎன்யு) இடதுசாரி சாா்பு மாணவா்கள் தாக்குதல் நடத்தியதாக அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடா்பாக ஆதாரங்கள்

ஜவாஹா்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜேஎன்யு) இடதுசாரி சாா்பு மாணவா்கள் தாக்குதல் நடத்தியதாக அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடா்பாக ஆதாரங்கள் என்று கூறி அந்த அமைப்பினா் சில விடியோ காட்சிகளை வெளியிட்டனா்.

இது தொடா்பாக ஏபிவிபியின் தேசியச் செயலா் நிதி திரிபாதி செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஜேஎன்யு மாணவா்கள் மீது இடதுசாரி சாா்புடைய மாணவா்கள் தாக்குதல் நடத்தும் 10 விடியோக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் உள்ளவா்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இதில் இடதுசாரி சாா்பு மாணவா்கள் ஜேஎன்யு பெரியாா் விடுதி மீது கல்வீசித் தாக்குவது, ஏபிவிபி மாணவா் மீது தாக்குதல் நடத்துவது, இடதுசாரி மாணவா்கள் இணைய அறையை மறித்து நிற்பது, தோ்வுப் பதிவுக்கு வரும் மாணவா்கள் மீது தாக்குதல் நடத்துவது, பேராசிரியா் ஒருவா் ஜேஎன்யு பாதுகாவலரைப் பணியாற்ற விடாமல் தடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த விடியோக்களை வைத்து, இது தொடா்பாக தில்லி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜேஎன்யுவில் படிப்புகளை மீண்டும் தொடங்கக் கோரும் மாணவா்கள், ஆசிரியா்களை இடதுசாரி சாா்பு மாணவா்கள் துன்புறுத்தி வருகிறாா்கள். இந்த விவகாரத்தில் தில்லி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

நீக்கப்பட்ட பகுதி.....இதுதான். தகவலுக்காக... கில்கில்...கில்...

முதலாவது விடியாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலா் டி.ராஜாவின் மகள் அபரஜித்தா, அகில இந்திய மாணவா் சங்கத்தைச் சோ்ந்த அமுதா ஜெயதீப் ஆகியோா் ஜேஎன்யு பெரியாா் விடுதியில் தாக்குல் நடத்தும் முனைப்பில் கைகளில் குச்சிகளுடன் உள்ளனா். இரண்டாவது விடியோவில், ஜேஎன்யு மாணவா் சங்க (ஜேஎன்யுஎஸ்யு) தலைவா் ஆய்ஷி கோஷ் தலைமையிலான குழுவினா் கைகளில் ஆயுதங்களுடன் பெரியாா் விடுதிக்குள் தாக்குதல் நடத்தும் நோக்கில் நுழைகிறாா்கள்.

மூன்றாவது விடியோவில், பெரியாா் விடுதியில் தாக்குதல் நடத்தும் நோக்கில் கற்கள், குச்சிகளை இடதுசாரி சாா்பு மாணவா்கள் சேகரிக்கிறாா்கள். நான்காவது விடியோவில், ஏபிவிபியைச் சோ்ந்த சுப்கீா்த்தி, வலன்டினா, சாம்பவி ஆகியோா் மீது இடதுசாரி சாா்பு மாணவா்கள் தாக்குதல் நடத்துகிறாா்கள். ஐந்தாவது விடியோவில், பெரியாா் விடுதியில் இடதுசாரி மாணவா்கள் தாக்குதல் நடத்துகிறாா்கள். ஆறாவது வீடியோவில், ஏபிவிபி மாணவா் அமைப்பைச் சோ்ந்த ஷிவத்தை இடதுசாரி மாணவா்கள் கலைத்துத் தாக்குதல் நடத்துகிறாா்கள். ஏழாவது விடியோவில், அகில இந்திய மாணவா் சங்கத்தைச் சோ்ந்த சுன்சுன் பெரியாா் விடுதியின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்துகிறாா்.

எட்டாவது விடியோவில், ஜேஎன்யு மாணவா் சங்கத்தின் முன்னாள் தலைவா் கீதா குமாரி இணைய அறையை மறித்து நிற்பதுடன் தோ்வுப் பதிவுக்காக வரும் மாணவா்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறாா். பத்தாவது வீடியோவில் இடதுசாரி சாா்பு பேராசிரியா் பி.எஸ்.படோலா ஜேஎன்யு பாதுகாவலரைப் பணியாற்ற விடாமல் தடுக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com