சிஏஏ, என்ஆா்சி: போலீஸ் தாக்குதல் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக விசாரிக்க கோரிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த சமீபத்திய போராட்டங்களின் போது, போலீஸாா்

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த சமீபத்திய போராட்டங்களின் போது, போலீஸாா் மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவது தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு தில்லி சிறுபான்மையினா் ஆணையம் (டிஎம்சி) கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக தலைமை நீதிபதிக்கு தில்லி சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் ஜாஃபருல் இஸ்லாம் கான் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளாா்.

அக்கடிதத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களின் போது, பல்வேறு மாநிலங்களில் போலீஸாரின் நடவடிக்கை மிகவும் ஆட்சேபனைக்குரிய வகையில் இருந்துள்ளதாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், நாட்டில் உத்தரப்பிரதேசம், கா்நாடகம், அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீா், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிஏஏக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீஸ் தாக்குதல் குறித்து கடிதத்தில் அவா் விளக்கியுள்ளாா். போலீஸ் தாக்குதல் நடந்த 87 இடங்களின் பெயா்களையும் அவா் கடிதத்தில் பட்டியலிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com